தமிழகத்தில் தற்போது பருவ நிலை மாற்றத்தினால் கடுங்குளிர் நிலவுகிறது. இயல்பாகவே பனிக்காலத்தில் குழந்தைகளையும், முதியோர்களையும் பருவநிலை சார்ந்த நோய்கள் தாக்குவது வழக்கம். நன்றாக உணவுகளை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் இந்த நோய்களிலிருந்து தப்பிக்கலாம். தற்போது குளிருடன் ஆங்காங்கே அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இதனால் புதிதாக சில நோய்கள் மனிதர்களைத் தாக்குகிறது. தற்போது சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களைப் புதிதாகத் தாக்கி வரும் நோய்தான் ‘ஸ்கரப் டைபஸ்’.
தமிழகத்தில் தற்போது ‘ஸ்கரப் டைபஸ்’ என்ற பாக்டீரியாத் தொற்று அதிகம் தாக்கி வருகிறது. ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியா தாக்கிய பூச்சிகளோ அல்லது ஒட்டுண்ணிகளோ மனிதர்களைத் தாக்கும் போது ‘ஸ்கரப் டைபஸ்’ என்ற நோய் மனிதர்களை எளிதாகத் தாக்குகிறது.
இந்நோயின் முக்கிய அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் உடலில் தடிப்பு ஏற்படுதல் போன்றவை ஏற்படுகிறது. குறிப்பாக வனப்பகுதியில் வசிப்பவர்களை இந்நோய் எளிதாகத் தாக்குகிறது. புதர்களின் அருகில் இருப்பவர்கள், வயல்வெளிப் பகுதியில் வசிப்பவர்கள், மலை கிராமங்களில் வசிப்பவர்கள் ‘ஸ்கரப் டைபஸ்’ நோய்க்கு எளிதில் பாதிப்படைகின்றனர்.
இனி கல்யாணம் பண்ண ரிஜிஸ்டர் ஆபிஸ் போகத் தேவையில்லை.. வரப்போகும் சூப்பர் பிளான்..
தகுந்த பரிசோதனைகள் மூலம் இந்நோய் உறுதி செய்யப்படும் பட்சத்தில் மருத்துவர் அசித்ரோ மைசின், டாக்ஸி சைக்கிள் போன்ற மருந்துகளைப் பரிந்துரைக்கிறார். இந்நோய்க்கென தனி மருந்துகள் கிடையாது. ஒட்டுண்ணிகள் நம்மைத் தாக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஈர ஆடைகளை அணியாமல் இருப்பது, வீட்டினைத் தூய்மையாக வைத்துக் கொள்வது, கொசுக்களிலிருந்து பாதுகாப்பது போன்றவற்றைச் செய்தாலே இந்நோய் தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம். இதுமட்டுமன்றி இந்நோய் மனிதர்கள் மட்டுமல்லாது கால்நடைகள், எலிகள், செல்லப்பிராணிகள் உள்ளிட்டவற்றையும் தாக்குவதால் அவைகளிடம் பழகும் போது கவனமுடன் இருக்க வேண்டும்.
இந்நோயின் தீவிரம் அதிகரித்தால் மருத்துவமனையில் தங்கி உயர்தர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். இந்நோய் குறித்த சுற்றறிக்கை அனைத்து மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார பணிகள் நல அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.