ஆந்திர மாநிலத்தில் 15 மாணவிகளின் தலைமுடியை பள்ளி முதல்வர் வெட்டியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள கஸ்தூரிபாய் வித்யாலயா என்ற பள்ளியில், மாணவிகள் சிலர் தலையை சரியாக வாரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடனே இது குறித்து விசாரித்த பள்ளி முதல்வர் 15 மாணவிகளின் தலைமுடியை வெட்டியதாகவும், தங்கள் தலைமுடியை வெட்ட வேண்டாம் என்று மாணவிகள் கெஞ்சி கேட்டுக் கொண்டும் இரக்கம் கொள்ளாமல் பள்ளி முதல்வர் தலைமுடியை வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 15ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை நடந்து வருவதாகவும், இதற்கான அமைக்கப்பட்ட குழு 15 மாணவிகள் இடமும் வாக்குமூலம் பெற்று தற்போது விசாரணை தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பள்ளி முதல்வர் தாமதமாக பள்ளிக்கு வந்தால் வெயிலில் பல மணி நேரம் நிற்க வைப்பார் என்றும் தங்களை கொடுமைப்படுத்துவார் என்றும் சில மாணவிகள் கூறியிருப்பதாக தெரிகிறது.
இதனை அடுத்து, பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்பது என மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பள்ளி முதல்வர் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆந்திர மாநில கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.