இந்தியாவின் மிகப்பெரிய பொது துறை வங்கியாயான SBI, தனது பணியாளர் உற்பத்தித்திறன் மற்றும் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த Agentic AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது.
ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் சாட்போட்களுக்கு பதில், agentic AI பயன்படுத்த இருப்பதாகவும், இது வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, தீர்வுகளை பரிந்துரைத்து, பரிவர்த்தனைகளையும் முடிக்கக்கூடிய திறன் கொண்டது என்றும், இது ஒரு டிஜிட்டல் நண்பராக செயல்படுகிறது என்றும் SBI தெரிவித்துள்ளது.
இந்த அம்சம் குறித்து பேசிய SBI துணை நிர்வாக இயக்குநர் நிதின் சக் ‘இந்த AI முதலில் வங்கி உள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் என்றும், அதில் உள்ள தவறுகள் சரிசெய்யப்பட்ட பின்னர் வாடிக்கையாளர்களுக்காக விரிவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
SBI ஏற்கனவே இரண்டு AI கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்று Deceased Account Settlement Chatbot. இது இறந்தவர்களின் கணக்குகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் உதவிக்கருவி. இன்னொன்று askSBI Chatbot. இது வணிகச் சிக்கல்களுக்கு தீர்வை வழங்கும் கருவி ஆகும்.
AI தொழில்நுட்பங்களை ஆதரிக்க, SBI ‘மேக்தூத்’ கிளவுட் மற்றும் Microsoft Azure இணைந்த ஹைபிரிட் கிளவுட் மாடலை பயன்படுத்துகிறது. இதனால் பெரிய அளவிலான டேட்டாக்களை பாதுகாப்பாக முடியும்.
AI தொழில்நுட்பத்தால் SBI வங்கி சேவைகளை வேகமாகவும், சுலபமாகவும் மாற்றி அமைக்கும் திட்டம் பயன்படுத்தப்படுவதால் கோடிக்கணக்கான இந்தியர்களின் வங்கி பணபரிமாற்றம் எளிமையாக இனி மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.