ஆபரேஷன் 37.. மோடியை பதவியில் இருந்து தூக்க சதி செய்த டிரம்ப்.. விலை பேசப்பட்டார்களா 37 பாஜக எம்பிக்கள்? மோடிகிட்ட முடியுமா? சதித்திட்டத்தை முறியடித்த மோடி.. வாபஸ் பெற்ற டிரம்ப்.. மோடிடா..

ஒரு தனியார் ஊடகத்தின் நிகழ்ச்சியில் பேசிய Savio Rodrigues என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவின் “டீப் ஸ்டேட்”, சிஐஏ மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இணைந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பதவியில் இருந்து…

operation

ஒரு தனியார் ஊடகத்தின் நிகழ்ச்சியில் பேசிய Savio Rodrigues என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவின் “டீப் ஸ்டேட்”, சிஐஏ மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இணைந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பதவியில் இருந்து நீக்குவதற்காக ‘ஆபரேஷன் டிவெர்ஷன், டிசெப்ஷன் அண்ட் டிவிஷன்’ என்ற ரகசிய நடவடிக்கையை தொடங்கியதாக கூறியுள்ளார். எனினும், இந்த திட்டம் இப்போது கைவிடப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை என்றாலும், நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,

இந்த நடவடிக்கையில், ‘மோடியை இந்திய பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும்’ என்ற ஒற்றை இலக்குடன் தொடங்கப்பட்டதாகவும், இதில் ‘சிபி’ (Change of Person) மற்றும் ‘ஆர்சி’ (Regime Change) ஆகிய இரண்டு மாதிரிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

‘ஆபரேஷன் 37’ என்ற ரகசிய முயற்சி மூலம், பாஜகவுக்குள்ளேயே 37 பாராளுமன்ற உறுப்பினர்களை பயன்படுத்தி, கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மத்தியில் குழப்பத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது என்றும், இதன் மூலம் பிரதமர் மோடியை பதவி விலக செய்ய அழுத்தம் கொடுக்க முற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்த சதித்திட்டத்திற்கு பின்னால் இருந்த முக்கிய காரணம், பிரதமர் மோடி அமெரிக்காவின் நலன்களுக்கு ஏற்ப செயல்படாததுதான் என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, இந்திய நலன்களுக்கு முன்னுரிமை அளித்ததால், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போனது, அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்றும் அவர் கூறினார்.

ஆனால் இந்த ரகசிய திட்டம் குறித்த தகவல் கசிந்ததால், அது பொதுவெளிக்கு வந்த பிறகு, திட்டம் கைவிடப்பட்டது. இந்த திட்டம் கசிந்ததற்கான காரணம், செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடந்த உயர் மட்ட கூட்டங்களில், அமெரிக்க குழுவில் இருந்த சிலரே இந்த தகவலை வெளியிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக Savio Rodrigues கூறினார்.

டிரம்ப்பின் கிண்டல் மற்றும் அவதூறுகளுக்கு உறுதியான, அதே நேரத்தில் ஆக்ரோஷமான முறையில் பிரதமர் மோடி, பதிலளித்ததும், இந்த திட்டம் தோல்வியடைவதற்கான மற்றொரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இதனால் தான் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும், டிரம்ப் தனது பேச்சில் திருத்தம் செய்ததாகவும் அவர் கூறினார். இதன் தொடர்ச்சியாக, இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச வரிகளில் குறிப்பிடத்தக்க குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த திட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருந்தாலும், அமெரிக்காவின் ‘டீப் ஸ்டேட்’ அமைப்புகள் இந்தியாவில் குழப்பத்தை உருவாக்க தொடர்ந்து முயற்சிக்கும் என்றும், எனவே இந்திய அரசு எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி உளவுத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்திய அரசு இந்த பிரச்சனையை மிகவும் முதிர்ச்சியுடன் கையாண்டதாகவும், இது இந்தியாவின் இராஜதந்திர வலிமையைக் காட்டுவதாகவும் Savio Rodrigues பாராட்டினார்.