முகேஷ் அம்பானியின் மருமகளை விட சானியா மிர்சா பணக்காரரா? எத்தனை கோடி சொத்துக்கள்?

உலகின் முன்னணி பணக்கார குடும்பங்களில் ஒன்று முகேஷ் அம்பானியின் குடும்பம் என்பதும் முகேஷ் அம்பானியின் ஆயிரக்கணக்கான கோடிக்கு அவரது இரண்டு மகன்கள் மற்றும் மருமகள் தான் பின்னாளில் சொந்தக்காரர்கள் என்பதும் தெரிந்தது. இருப்பினும் தற்போது முகேஷ் அம்பானியின் மருமகளுக்கு இருக்கும் சொத்துக்களை விட முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு அதிக சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முகேஷ் அம்பானிக்கு ஆனந்த அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகிய இரண்டு மகன்களும் ஈஷா அம்பானி என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் ஆனந்த அம்பானியின் மகள் மனைவி ஸ்லோகா மேத்தா என்பதும் ஆகாஷ் அம்பானியின் மனைவி ராதிகா மெர்சண்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு மருமகள்களை விட பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அதிக சொத்து வைத்திருக்கிறார் என்றால் பெரும் ஆச்சரியத்தை தான் ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா டென்னிஸ் விளையாட்டுத்துறையில் உச்சத்தில் இருந்த போது அதிக சம்பளம் வாங்கும் வீராங்கனை ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி இவருக்கு விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் வந்ததாகவும் குறிப்பாக ஒரு முன்னணி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிப்பதற்காக அவர் ரூ.25 கோடி சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

ambani family

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் என்பவரை சானியா மிர்சா திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அவரை விவாகரத்து செய்துவிட்டு ஹைதராபாத்தில் அவர் தனது குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத்தில் அவருக்கு 13 கோடி மதிப்புடைய ஆடம்பர பங்களா உள்ளது என்றும் அது மட்டுமின்றி அவருக்கு பிஎம்டபிள்யூ , ரேஞ்ச் ரோவர், ஜாக்குவார் உள்பட பல ஆடம்பர கார்களையும் வைத்துள்ளார். இவருடைய கார்களின் மதிப்பு மட்டுமே சுமார் 6 கோடி என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.216 கோடி என்றும் அது மட்டுமின்றி இவர் ஒரு டென்னிஸ் அகாடமியை நடத்தி வருவதால் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் அதிலிருந்து பணம் வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் மூத்த மருமகள் ஸ்லோகாவின் சொத்து மதிப்பு வெறும் 120 கோடி தான் என்பதும் இளைய மருமகள் ராதிகா மெர்சண்டின் சொத்து மதிப்பு வெறும் பத்து கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரின் சொத்துக்களை விட இரு மடங்கு சானியா மிர்சா சொத்து வைத்திருக்கிறார் என்பது ஆச்சரியமான உண்மையாகும்.