மீண்டும் டிரெண்டுக்கு வரும் சாம்சங் ஃபோல்ட் ஸ்மார்ட்போன்.. முழு விபரங்கள்..!

By Bala Siva

Published:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் மடிக்கக்கூடிய ஃபோல்ட் டைப் ஸ்மார்ட்போன்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் திடீரென ஃபோல்ட் டைப் போன்களுக்கு பயனர் மத்தியில் வரவேற்பு குறைந்தது.

ஆனால் தற்போது மோட்டரோலா, சாம்சங் உள்பட ஒரு சில நிறுவனங்கள் மீண்டும் போல்ட் டைப் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான Samsung Galaxy Z Fold 3 என்ற போன் தற்போது மீண்டும் ட்ரெண்டுக்கு வந்துள்ளது. இந்த போனின் முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

Samsung Galaxy Z Fold 3 ஸ்மார்ட்போன் கடந்த 2021 இல் வெளியிடப்பட்ட ஒரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும். இது 7.6-இன்ச் இன்டர்னல் டிஸ்ப்ளே மற்றும் 6.2-இன்ச் கவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது Snapdragon 888 5G பிராஸசர் மூலம் இயக்கப்படுகிறது.

மேலும் 12GB ரேம், மூன்று லென்ஸ் பின்புற கேமரா அமைப்பு, 10MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. வாட்டர் ரெசிஸ்டெண்ட் வசதி கொண்ட இந்த போன் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது

Samsung Galaxy Z Fold 3 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் இதோ:

158.2 x 67.1 x 16.0 மிமீ ஃபோல்ட் டிஸ்ப்ளே

158.2 x 128.4 x 6.4 மிமீ விரிக்கக்கூடிய ஃபோல்ட்

7.6-இன்ச் இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் AMOLED 2X டிஸ்ப்ளே

6.2-இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே (2260 x 832 பிக்சல்கள்) கவர் டிஸ்ப்ளே

ஸ்னாப்டிராகன் 888 5ஜி பிராஸசர்

12 ஜிபி ரேம்

256 ஜிபி அல்லது 512 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்

12MP அகலம் (f/1.8), 12MP அல்ட்ராவைடு (f/2.2), 12MP டெலிஃபோட்டோ (f/2.4) கேமிரா

10MP (f/2.2) செல்பி கேமிரா

4400mAh பேட்டரி

ஆண்ட்ராய்டு 11 ஆப்பரேட்டிங் சிஸ்டம்

Samsung Galaxy Z Fold 3 ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன் மற்றும் தனித்துவமான மடிக்கக்கூடிய வடிவமைப்பை கொண்டது. ஆனால் இதன் விலை மலிவானது அல்ல. இந்தியாவில் இதன் விலை ரூ.104,999 என்பது குறிப்பிடத்தக்கது.