Samsung Galaxy S22 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த போது ரூபாய் 84,999 என விற்பனை ஆனது. இந்த நிலையில் தற்போது ரூபாய் 35,000 தள்ளுபடி செய்து பிளிப்கார்ட்டில் விற்பனை ஆகி வருகிறது. தற்போது இதன் விலை 49,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி HDFC கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த சலுகை தவணை முறையில் வாங்கினால் மட்டுமே கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு மேலும் 1250 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் என்றும் இதனால் இந்த ஸ்மார்ட் ஃபோனில் விலை 48,749 என குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை இன்னும் எத்தனை நாட்களுக்கு என்பது குறித்த தகவல் இல்லை என்றாலும் மிகக் குறைந்த விலையில் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samsung Galaxy S22+ ஸ்மார்ட்போன் Qualcomm’s Snapdragon 8 Gen 1 SoC பிராஸசர் உடையது. து 2022 ஆம் ஆண்டில் பல ஃபிளாக்ஷிப் போன்களை இயக்குகிறது. மேலும் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளதால் சார்ஜிங் குறித்த கவலை இல்லை.
Android OS அம்சம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் முழு-HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே கொண்டுள்ளது.