புதிய பிராஸசருடன் மீண்டும் வெளியாகும் Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்போன்.. ஜூலையில் விற்பனை..!

By Bala Siva

Published:

சாம்சங் நிறுவனத்தின் Samsung Galaxy S21 FE என்ற ஸ்மார்ட்போன் கடந்த 2021 ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் ஆகி 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது

இந்த இந்த ஸ்மார்ட் போன் மிகச்சிறந்த வரவேற்பை பயனர்கள் மத்தியில் பெற்ற நிலையில் தற்போது புதிய பிராஸசர் மாற்றப்பட்டு மீண்டும் இந்தியாவில் இந்த போன் வெளியாக உள்ளதாகவும் ஜூலை முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் புறப்படுகிறது.

பிராஸசர் மாற்றப்பட்டவுடன் இந்த போனில் உள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்போன் புதியதாக Qualcomm Snapdragon 888 SoC பிராஸசர் உடன் இந்தியாவில் மீண்டும் அறிமுகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் முதலில் இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு Exynos 2100 SoC பிராஸசர் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், ஃபோனின் ஸ்னாப்டிராகன் 888 பதிப்பு 2022 ஆம் ஆண்டு மற்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ஜூலையில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்போனில் புதிய ஸ்னாப்டிராகன் 888 பிராஸசருடன் அறிமுகமாக இருப்பதால் இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.33,850 என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 888 என்பது Exynos 2100 ஐ விட அதிக சக்தி வாய்ந்த பிராஸசர் ஆகும். மேலும் பிராஸசர் மாற்றப்பட்ட Samsung Galaxy S21 FE ஸ்மார்ட்போன் 5ஜி அம்சத்தையும் ஆதரிக்கும் என்பது முக்கியமானது.

இந்த ஸ்மார்ட்போனின் மேலும் சில சிறப்பம்சங்கள் இதோ:

Qualcomm Snapdragon 888 பிராஸசர்
6 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம்
128 ஜிபி அல்லது 256 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
12MP பிரதான சென்சார், 12MP அல்ட்ராவைட் சென்சார், 8MP டெலிஃபோட்டோ சென்சார் கேமிரா
32MP செல்பி கேமிரா
4,500mAh பேட்டரி
ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்