சாம்சங் நிறுவனம் ஒவ்வொரு முறையும் இந்தியாவில் புது புது மாடல்களை அறிமுகம் செய்யும்போது அந்த மாடலுக்கு பயனர்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் விரைவில் சாம்சங் நிறுவனம் Samsung Galaxy M34 5G என்ற மாடலை வெளியிட உள்ள நிலையில் இந்த மாடல் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.
Samsung Galaxy M34 5G ஸ்மார்ட்போன் குறித்து இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் BIS சான்றிதழையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் ரூ.20,000க்கு கீழ் விலையில் இருக்கும் எனவும், இதில் 6.6 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 50MP பிரதான கேமரா மற்றும் 5000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இன்னும் ஒருசில வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy M34 5G ஸ்மார்ட்போனில் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் சில அம்சங்கள் இதோ:
* 6.6-இன்ச் FHD+ டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதத்துடன்
* MediaTek Dimensity 900 பிராஸசர்
* 6ஜிபி/8ஜிபி ரேம்
* 128ஜிபி/256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
* 50MP பிரதான கேமரா, 8MP அல்ட்ராவைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா
* 25W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி
* ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்