செயற்கை நுண்ணறிவு உலகெங்கிலும் உள்ள துறைகளை வேகமாக மாற்றி அமைத்து வரும் நிலையில், ஓப்பன்ஏஐ தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், 2030 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய வேலைவாய்ப்பில் ஒரு பெரும் மாற்றம் ஏற்படும் என்று கணித்துள்ளார். தனது சமீபத்திய வலைப்பதிவு ஒன்றில், AI புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அதேசமயம், பல பாரம்பரிய வேலைகளை வழக்கொழிந்து போக செய்யும் என்றும், சமூகத்தில் வேலை மற்றும் அதன் மதிப்பு குறித்த புதிய வரையறையை இது உருவாக்கும் என்றும் ஆல்ட்மேன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாற்றம் ஒரே இரவில் நடந்துவிடாது, ஆனால் இன்னும் 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு பிறகு நாம் திரும்பிப் பார்க்கும்போது, படிப்படியாக ஏற்பட்ட இந்த மாற்றங்கள் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்திருக்கும் என்று கூறும் ஆல்ட்மேன் வேலை இழப்பால் ஏற்படும் சவால்களையும் ஒப்புக்கொள்கிறார். ஆனால் AI வளர்ச்சி உலகை செல்வ செழிப்பாக மாற்றும் என்றும், புதுமைகளுக்கும் மனித சாதனைகளுக்கும் புதிய வழிகளைத் திறக்கும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
இந்த மாற்றத்தை விளக்க வரலாற்றிலிருந்தே அவர் உதாரணங்களை சுட்டிக்காட்டுகிறார். 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு விவசாயி, உடல் உழைப்பு இல்லாத, மென்பொருள் பொறியியல் அல்லது கிராஃபிக் வடிவமைப்பு போன்ற இன்றைய நவீன வேலைகளை போலி வேலைகள் என்று கருதியிருக்கலாம். ஆனால் இன்று இந்த வேலைகள் அர்த்தமுள்ளதாகவும், அத்தியாவசியமானவையாகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோல் தான் இன்று AI சில வேலைகளை கையகப்படுத்தும்போது, மனிதர்கள் இன்றைய அளவுகோல்களின்படி வழக்கத்திற்கு மாறானதாக கருதுவார்கள். ஆனால், அந்தப் பணிகளை செய்பவர்களுக்கு அவை மிகவும் முக்கியமானதாகவும், நிறைவானதாகவும் இருக்கும்.
AI இன் திறன்கள் வளர்ந்து வந்தாலும், மனித உணர்வு மற்றும் மற்றவர்களை கவனித்துக்கொள்ளும் திறனை இயந்திரங்களால் பிரதிபலிக்க முடியாது என்பதை ஆல்ட்மேன் அடிக்கோடிட்டு காட்டுகிறார். இதை அவர் மனித இனத்தின் ஒரு வரையறுக்கும் மற்றும் நீடித்த பலமாக பார்க்கிறார்.
அடுத்த தலைமுறையினர் இன்று பார்க்கும் பாரம்பரிய வேலைகளை செய்ய முடியாது. கண்டிப்பாக புதிய தொழில்நுட்பத்துடன் போட்டி போட வேண்டிய நிலை இருக்கும். அப்போது தான் அவர்கள் இந்த உலகத்தில் வாழ தகுதியுடையவர்கள் என்ற நிலை மாற வாய்ப்புள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
