நம்மிடம் இருக்கும் பழைய தங்க நகைகளை விற்பனை செய்தால் அந்த பணத்திற்கு வரி கட்ட வேண்டுமா என்ற கேள்வி பலருடைய மனதில் எழுந்துள்ளது. ஏனெனில் நாம் வாங்கும் போது தங்கம் மிகவும் குறைவான விலையாக இருந்திருக்கும்.
ஆனால் இப்போது தங்கத்தின் விலை அதிகமாக இருப்பதால் வாங்கிய விலை, விற்ற விலை ஆகிஅ இரண்டுக்கும் விலை வித்தியாசம் இருப்பதால் இந்த வித்தியாசத்தை லாபமாக கணக்கிட்டு அந்த லாபத்திற்கு வருமான வரி கட்ட வேண்டுமா என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது. இது குறித்து வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
பழைய தங்க நகைகளை வாங்கி 2 வருடங்களுக்கு மேல் வைத்திருந்து விற்பவர்களுக்கு, அதை நீண்ட கால மூலதன ஆதாயம் (Long Term Capital Gain) எனக் கருதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், 2 வருடங்களுக்குள் விற்கும் போது, அதைக் குறுகிய கால மூலதன ஆதாயம் (Short Term Capital Gain) என்று கருதுவார்கள்.
மூலதன ஆதாயம் என்பது, விற்கும் விலையில் இருந்து வாங்கிய விலையை கழித்த பிறகு கிடைக்கும் லாபம் ஆகும்.
குறுகிய கால மூலதன ஆதாயத்திற்கு, நீங்கள் எந்த வருமான வரி வரம்பில் உள்ளீர்களோ, அதற்கேற்ற வரியைக் கட்ட வேண்டும். நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு, 12.50% வரியைச் செலுத்த வேண்டும். தங்க நகைகளை விற்று பெறப்படும் பணத்தை வீடு வாங்க பயன்படுத்தினால், வருமான வரி சட்டத்தின் 54F பிரிவின்படி வரிச்சலுகையை பெற வாய்ப்பு உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
