ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்.. இனி நேரா பம்பையில் போய் இறங்கலாம்.. கேரள அரசின் வாவ் அறிவிப்பு..

By John A

Published:

கார்த்திகை மாதம் துவங்க இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இப்போதிருந்தே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிய ஆரம்பித்து விட்டது. உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத மண்டல பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை வழிபட்டுச் செல்வது வழக்கம்.

48 நாள், ஒருமாதம் என அவரவர் வசதிக்கேற்ப விரதம் இருந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். இதனால் தமிழகத்திலிருந்து கேரளாவிற்குச் செல்லும் குமுளி மலைப்பாதை, கம்பம் மெட்டு, தென்காசி மலைப்பாதை, கோவை பாலக்காடு பாதை, மூணாறு பாதை போன்றவற்றில் போக்குவரத்து அதிகம் இருக்கும்.

அந்த செல்லத்தை இங்க தூக்கிட்டு வாங்கடா.. தேர்தலில் வெற்றி பெற்றால் திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வாக்குறுதி கொடுத்த வேட்பாளர்..

இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதுண்டு. தமிழக அரசு சார்பில் குமுளி, பம்பா நதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து இப்பேருந்துகள் இயக்கப்படும். அவ்வாறு சபரிமலைக்கு வரும் பேருந்துகள் பம்பையில் இறக்கி விடப்பட்டு மீண்டும் நிலக்கல் என்ற பகுதிக்கு வந்து நிறுத்தப்படும். இங்கிருந்து பம்பா நதிக்கு கேரள மாநிலப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இதனால் பக்தர்கள் நிலக்கல் பகுதியில் இறங்கி கேரள மாநிலப் பேருந்துகளில் பயணம் செய்தனர்.

தற்போது ஐயப்ப பக்தர்களுக்கு சிரமத்தினைக் குறைக்கும் வகையில் SETC பேருந்துகள் பம்பையிலிருந்து புறப்பட கேரள அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதனால் பக்தர்களுக்கு 20 கி.மீ தூரத்திற்கு மீண்டும் கேரளப் பேருந்துகளை நாட வேண்டிய அவசியம் இருக்காது. வருகிற நவம்பர் 15 முதல் மகர ஜோதி தரிசன நாளான ஜனவரி 15 வரை சபரிமலைக்கு தமிழக அரசின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.