இந்திய மருந்து கம்பெனி மீது குண்டு போட்ட ரஷ்யா.. புதின் – மோடி நட்பில் விரிசலா?

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய மருந்து நிறுவனம் Kusum என்ற நிறுவனத்தின் மருந்துக் கிடங்கு ஒன்றில் ரஷ்யா ஏவிய ஏவுகணை தாக்கியது என்று உக்ரைனிய அதிகாரிகள் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

indian company
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய மருந்து நிறுவனம் Kusum என்ற நிறுவனத்தின் மருந்துக் கிடங்கு ஒன்றில் ரஷ்யா ஏவிய ஏவுகணை தாக்கியது என்று உக்ரைனிய அதிகாரிகள் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் புதின் – மோடி நட்பில் விரிசலா என்ற கேள்வி எழுந்துள்ளது.பிரிட்டன் நாட்டின் உக்ரைன் தூதர் மார்டின் ஹாரிஸ், முதன்முதலாக இந்த தாக்குதலுக்கு பிறகு நிகழ்ந்த பாதிப்புகளின் புகைப்படங்களை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவிலுள்ள உக்ரைன் தூதரகம் அந்த புகைப்படங்களை மீண்டும் பகிர்ந்து, “இந்தியாவுடன் இருந்த நட்பு என்ன ஆச்சு? ஏன் நேரடியாக இந்திய நிறுவனத்தை ரஷ்யா தாக்கியுள்ளது” எனக் கடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.

இந்திய மருந்து நிறுவனம் Kusum கிடங்கில் இன்று ரஷ்ய ஏவுகணை தாக்கியதால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் முற்றிலும் அழிக்கப்பட்டன” என  உக்ரைன் தூதரகம் ‘X’  தளத்தில்  வெளியிட்டுள்ள பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில்  ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் இதுகுறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் என்றும், உக்ரைன் – ரஷ்யா போர் நீடிப்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விரும்பவில்லை என்றும், இந்த போர் தேவையற்றது, இதை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த இந்திய நிறுவனத்தின் தாக்குதலுக்கு இந்தியா என்ன எதிர்வினை ஆற்றப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த தாக்குதல் குறித்து ரஷ்யா இன்னும் விளக்கமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.