ரத்தம் கலந்த மிட்டாய், பட்டாம்பூச்சி பொறியல், நசுக்கிய கோழித் தலை.. டின்னரின் விலை ரூ.59,000..!

  டென்மார்க் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் சமீபத்தில் 5 மணி நேரம் டின்னர் சாப்பிட்டதாகவும், தனக்கு 59 ஆயிரம் ரூபாய் பில் வந்ததாகவும், இந்த டின்னர் தனக்கு முழு அளவில் திருப்தி தந்ததாகவும்…

dinner

 

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் சமீபத்தில் 5 மணி நேரம் டின்னர் சாப்பிட்டதாகவும், தனக்கு 59 ஆயிரம் ரூபாய் பில் வந்ததாகவும், இந்த டின்னர் தனக்கு முழு அளவில் திருப்தி தந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், அவர் தந்த மெனுவைப் பார்த்து நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சி அடைந்து, “இதெல்லாம் ஒரு உணவா?” என விமர்சித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டென்மார்க்கில் உள்ள ஒரு பிரபலமான ரெஸ்டாரண்டில் 5 மணி நேரம் டின்னர் சாப்பிட்டதாகவும், தன்னுடைய பில் 59 ஆயிரம் ரூபாய் வந்ததாகவும் ஒரு பெண் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அவர் சாப்பிட்ட உணவில் ரத்தம் கலந்த மிட்டாய், பட்டாம்பூச்சி பொறியல், நசுக்கிய கோழித் தலை, கச்சா ஜெல்லி மீன், பிளாஸ்டிக் போன்ற உணவுகள் இருந்ததாக கூறியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள், “இது உண்மையில் உணவா அல்லது சோதனையா?” என்று கேள்வி எழுப்பி, “மெனு விசித்திரமாக உள்ளது; இது உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்!” என எச்சரித்துள்ளனர்.

“நான் சாப்பிட்ட டின்னரின் சிறப்பு வீடியோ இது. உணவின் ருசி, அமைப்பு மற்றும் கூடுதல் விவரங்களை சேர்க்க விரும்பினேன். ஆனால், மூன்று நிமிடத்தில் வீடியோவை முடிக்க வேண்டியிருந்ததால் என்னால் பல விஷயங்களைச் சொல்ல முடியவில்லை. இருப்பினும், இந்த உணவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ நான்கு நாட்களில் சுமார் 2 லட்சம் லைக்குகள் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் பலர், “இந்த உணவு பிடிக்கவில்லை,” “59 ரூபாய்க்கு கொடுத்தால்கூட சாப்பிட மாட்டேன்!” “மிருகங்கள் வேட்டையாடிச் சாப்பிடும் உணவு போல் இருக்கிறது!” என கமெண்ட் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.