வெறும் 59 ரூபாய் மட்டுமே.. டெங்கு, மலேரியா காய்ச்சலுக்கு காப்பீடு திட்டம்..!

வெறும் 59 ரூபாய் பிரிமியம் தொகையில் டெங்கு, மலேரியா, காய்ச்சலுக்கு காப்பீடு திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது மக்களுக்கு பெரும் பயன் உள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக மருத்துவ காப்பீடு…

phone pe

வெறும் 59 ரூபாய் பிரிமியம் தொகையில் டெங்கு, மலேரியா, காய்ச்சலுக்கு காப்பீடு திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது மக்களுக்கு பெரும் பயன் உள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக மருத்துவ காப்பீடு திட்டத்தில் பாலிசி எடுப்பது என்பது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஒரு சில நோய்களுக்கு தனித்தனியாகவே காப்பீடு திட்டமும் சில நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.

அந்த வகையில் போன் பே நிறுவனம், டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா, பன்றி காய்ச்சல் போன்ற வியாதிகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த காப்பீடு திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு 59 ரூபாய் மட்டுமே பிரீமியம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வெறும் 59 ரூபாய் என்பது ஒரு ஐந்து டீ சாப்பிடும் காசு என்பதால், இந்த திட்டத்தில் இணைந்து மேற்கூறிய வியாதிகளுக்கு செலவு இன்றி சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா, பன்றி காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் செய்து கொள்ளலாம் என்று போன் பே நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த பாலிசியை 100% டிஜிட்டல் முறையில் போன் பே செயலி மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்றும், ஐசியூ செலவு உள்பட அனைத்து விதமான செலவுகளுக்கும் இந்த காப்பீட்டில் கிளெய்ம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு நல்ல காப்பீட்டு ஆலோசகரிடம் ஆலோசனை செய்து இந்த காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.