வங்கிகளில் பிக்ஸட் டெபாசிட் (FD) முதலீடுகள் பாதுகாப்பானவை என்று பொதுவாக கருதப்படுகின்றன. FD மூலம் பணத்தை இழக்கும் அபாயம் இல்லை. எனினும், ரூ. 5 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் FD செய்பவர்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்.
FD மூலம் நிலையான வருமானம் கிடைக்கும் என்பது உண்மையானாலும், சில நேரங்களில் வங்கிகள் திவாலாவதனால் FD பாதுகாப்பாக இருக்காது. வங்கி திவால் ஆவதற்கான வாய்ப்பு இருக்கின்றபோது, FD-ல் உள்ள பணம் காப்பாற்றப்படுமா என்பது கேள்வியாகிறது. சிறிய அளவில் டெபாசிட் செய்தால் பிரச்சனை இல்லை, ஆனால் லட்சங்களில் டெபாசிட் செய்பவர்கள், FD தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கி விதிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
வங்கிகளில் பிக்ஸட் டெபாசிட் செய்பவர்களை பாதுகாக்க, ரிசர்வ் வங்கி “டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி” திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பலர் FD முதலீடு பாதுகாப்பானது என்பதை அறியாமல் இருக்கிறார்கள். இதை வங்கிகளும் சரியாக விளக்குவதில்லை. ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான DICGC, வங்கிகளில் FD முதலீடுகளுக்கான காப்பீட்டை வழங்குகிறது.
DICGC மூலம், FD பணத்திற்கு காப்பீடு வழங்கப்படும். வங்கி திவாலாகும் பட்சத்தில், இந்தக் காப்பீடு மூலம் FD பணத்தை மீண்டும் பெறலாம். ஆனால், FD காப்பீடு ரூ. 5 லட்சம் வரை மட்டுமே வழங்கப்படும், அதுவும் அசல் மற்றும் வட்டி சேர்த்து. இதற்கும் மேல் டெபாசிட் செய்திருந்தால், நீங்கள் மீதியை இழக்க வேண்டியதுதான்.
ஒரே வங்கியின் பல கிளைகளில் FD செய்திருந்தாலும், அனைத்தும் ஒன்றாக கணக்கிடப்படும். FD காப்பீடு, மொத்தமாக ரூ. 5 லட்சம் வரையில் தான் உண்டு. FD முதலீடு செய்வதற்கு முன், RBI விதிமுறைகளை கவனமாகப் படித்து செயல்பட வேண்டும். FD-ஐ பல வங்கிகளில் பிரித்து முதலீடு செய்வதால், முழுமையான காப்பீடு கிடைக்கும். FD காப்பீட்டுக்கான பிரீமியம் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியதில்லை, வங்கிகள் இதை தாமாகவே செலுத்துகின்றன.