ரூ.1999 ரீசார்ஜ் செய்தால் போதும்.. ஒரு வருடத்திற்கு வேலிடிட்டி.. ஏர்டெல் வழங்கும் சூப்பர் சலுகை..!

  தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி காரணமாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, பிஎஸ்என்எல் மிகவும் குறைந்த கட்டணத்தில் அதிக சலுகைகளை அறிவித்து வரும்…

Airtel

 

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி காரணமாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, பிஎஸ்என்எல் மிகவும் குறைந்த கட்டணத்தில் அதிக சலுகைகளை அறிவித்து வரும் நிலையில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கட்டணங்களை குறைத்து வருகின்றன.

அந்த வகையில், ஏர்டெல் தற்போது ரூ.1999க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கான வேலிடிட்டி பெறலாம் என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. ஏர்டெல் ரூ.1999 ப்ரீபெய்டு திட்டத்தில் இணைந்தால், 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், ஓடிடி மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் சலுகைகளும் கிடைக்கும்.

டேட்டாவை பொருத்தவரை, மாதத்திற்கு 2GB என மொத்தமாக 24GB வழங்கப்பட்டுள்ளது. டேட்டா மிகவும் குறைவாக தேவைப்படுபவர்களுக்கு, ஒரு வருடத்திற்கு அன்லிமிடெட் கால் வசதி வேண்டும் என்பவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் கால், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால் வசதிகள் இருப்பதால், போன் செய்வதில் எந்த விதமான சிக்கலும் இருக்காது. அதேபோல், இந்த திட்டத்தில் ஒரு வருடத்தில் 3600 எஸ்எம்எஸ் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் எஸ்எம்எஸ் தேவை என்றால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஏர்டெல் அறிவித்துள்ள இந்த புதிய திட்டத்தை பலரும் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.