ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் லட்சாதிபதிகள் அல்லது கோடீஸ்வரர்கள் ஆகுவது என்பது கனவில் தான் நடக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் என்ற சேமிப்பு திட்டம் வந்த பிறகு, ஒரு சில ஆண்டுகளில் அவர்கள் லட்சாதிபதியாகவும் கோடீஸ்வரராகவும் மாறி வருகின்றனர்.
குறைந்த வருமானம் உள்ள ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் முதலில் ஒரு பத்து லட்ச ரூபாய் சேர்க்க மட்டுமே கடுமையாக உழைக்க வேண்டும், போராட வேண்டும். அந்த 10 லட்சம் ரூபாயை சேர்த்து விட்டால், அவர்கள் சேமித்த பணமே அவர்களுக்கு வருமானம் ஈட்டிக் கொடுத்து, அவர்களை மிக எளிதில் கோடீஸ்வரராக ஆக்குவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மியூச்சுவல் ஃபண்டில் ஆண்டுக்கு சராசரியாக 12 முதல் 15 சதவீதம் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால், பத்து லட்சம் என்பது ஆறு ஆண்டுகளில் 20 லட்சம் ஆக உயர்வு பெறும். அந்த 20 லட்சம் அடுத்த ஆறாண்டுகளில் 40 லட்சமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சில மியூச்சுவல் ஃபண்டுகள் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் அளவிற்கு கூட வருமானம் தருவதால், அதிகபட்சமாக 20 முதல் 25 ஆண்டுகளில் 10 லட்சம் ரூபாய் என்பது ஒரு கோடியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, முதல் 10 லட்சத்தை நீங்கள் சேர்த்து விட்டால், அதன் பின் உங்கள் பணமே உங்களை கோடீஸ்வரர் ஆக்கி விடும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.