ராயல் என்ஃபீல்ட் தனது முதல் மின்சார மோட்டார் சைக்கிளை இந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி உலகளாவிய முறையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இத்தாலியில் நடைபெறும் EICMA கண்காட்சியில் ராயல் என்ஃபீல்ட் எலக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய மின்சார மோட்டார் சைக்கிள் “க்ளாசிக்” என்ற பெயருடன், க்ளாசிக் ரேஞ்சின் முத்திரையுடன் கூடிய வடிவமைப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே BikeWale இந்த பைக் குறித்து சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தது. அதில் இந்த பைக் நவீன மற்றும் பழமை மாறாமல் வடிவமைப்பைக் கொண்டிருப்பதாக கமெண்ட்ஸ் எழுந்தது.
கிர்டர் ஃபோர்க்ஸ் மற்றும் ராயல் என்ஃபீல்டின் பிரபலமான க்ளாசிக் தொடரை நினைவூட்டும் டெயில் பகுதி போன்ற வடிவமைப்புகளும் உள்ளன. இந்த அம்சங்கள், இந்த பைக் EICMA கண்காட்சியில் ஒரு கான்செப்ட் மாதிரியாக அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மின்சார ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளில் சக்கர கோர்க்குள் ஒரு பெரிய பேட்டரி தொகுப்பு வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மின்சார மோட்டாரின் விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை, ஆனால் அதற்கு மிகுந்த சக்தி வாய்ந்த பேட்டரி தேவைப்படும் என்பது மட்டும் உறுதி
இந்த பைக் குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படாததால், பைக் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ராயல் என்ஃபீல்டின் பாரம்பரிய வடிவமைப்புடன் மின்சாரம் என்ற புதுமையை இணைத்திருப்பது, மின்சார மோட்டார் சைக்கிள சந்தையில் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கக்கூடும்.