கதவுக்கு தடையாக வைத்திருந்த கல்லின் மதிப்பு ரூ.9 கோடி.. திருடர்களும் கண்டுகொள்ளவில்லை..!

  ரோமானிய நாட்டில், ஒரு பெண் தனது வீட்டில் கதவு காற்றுக்கு ஆடாமல் இருக்க தடையாக ஒரு கல்லை வைத்திருந்தார். அந்த கல்லின் மதிப்பு தற்போது ஒன்பது கோடி ரூபாய் என்று தெரியவந்துள்ளது. அந்த…

 

ரோமானிய நாட்டில், ஒரு பெண் தனது வீட்டில் கதவு காற்றுக்கு ஆடாமல் இருக்க தடையாக ஒரு கல்லை வைத்திருந்தார். அந்த கல்லின் மதிப்பு தற்போது ஒன்பது கோடி ரூபாய் என்று தெரியவந்துள்ளது.

அந்த வீட்டிற்கு சில திருடர்கள் கூட வந்ததாகவும், அவர்கள் கூட அந்த கல்லை சாதாரண கல் என நினைத்து எடுத்துக்கொண்டு செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.

ரோமானிய நாட்டைச் சேர்ந்த பெண், தன்னுடைய வீட்டின் அருகே உள்ள ஓடையிலிருந்து ஒரு கல்லை எடுத்துவந்து, தனது வீட்டில் உள்ள கதவுக்கு தடையாக வைத்தார். பெருங்காற்று காரணமாக கதவு அடிக்கடி தானாக மூடிக்கொள்வதை அடுத்து, இந்த கல்லை அவர் வைத்ததாக தெரிகிறது. அந்த கல்லுக்கு என்ன முக்கியத்துவம் என்பதையும் அவர் அறிந்திருக்கவில்லை. அவருடைய வீட்டிற்கு வந்த திருடர்கள் கூட அதை பற்றி அறிந்திருக்கவில்லை.

ஆனால், அந்த பெண்ணின் மரணத்திற்கு பிறகு, அவருடைய உறவினர் அந்த வீட்டை பெற்றபோது, அந்த கல்லை பார்த்து “இது வித்தியாசமாக இருக்கிறது” என சந்தேகித்தார். இதனை அடுத்து, ரோமானிய அரசுக்கு அதை தெரிவித்த நிலையில், ரசாயன ஆய்வுக்குப் பிறகு அது ரோமானிய ஆம்பர் என தெரியவந்தது.

38 முதல் 70 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்றும், செம்மண் நிறத்தில் இருந்த அந்த ஆம்பர் தேசிய பொக்கிஷமாக அறிவிக்கப்பட்டது. இதற்கீடாக, அந்த பெண்ணின் உறவினருக்கு ரூ. 9 கோடி வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வெறும் கதவுக்கு தடையாக வைத்திருந்த கல்லை சாதாரணமாக நினைத்த நிலையில், அது 9 கோடி ரூபாய் மதிப்புடையது என்பது தெரிய வந்துள்ளது. இது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.