அந்த வீட்டுக்கு எப்படி போகனும்ன்னு எனக்கு தெரியும்.. மனோஜோட வாழ்ந்தே தீருவேன்: ரோகிணி சபதம்..!

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில், இன்றைய எபிசோட்டில் ரோகிணியை விஜயா கழுத்தைப் பிடித்து வீட்டை விட்டு விரட்டுகிறார். “இனிமேல் இந்த வீட்டில் ஒரு நிமிடம் கூட நீ இருக்கக்…

sa8

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில், இன்றைய எபிசோட்டில் ரோகிணியை விஜயா கழுத்தைப் பிடித்து வீட்டை விட்டு விரட்டுகிறார். “இனிமேல் இந்த வீட்டில் ஒரு நிமிடம் கூட நீ இருக்கக் கூடாது! உனக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் இந்த வீட்டு பக்கமே வரக்கூடாது!” என்று கூறுகிறார்.

உடனே அண்ணாமலை அதை தடுத்து, “என்ன இருந்தாலும் அவள் ரோகிணி நம்ம வீட்டுக்கு வாழ வந்த மருமகள். அவள் செய்தது தவறுதான், ஆனாலும் அவளுடைய செயலின் நியாயம் என்ன என்று கேட்க வேண்டும்!” என்று கூறுகிறார்.

இதற்கு விஜயா, “இதுக்கு மேல அவளிடம் என்ன கேட்க வேண்டியிருக்கிறது? நான் கூட்டிக்கொண்டு வந்த மருமகளை, இப்போது நானே வெளியே விரட்டுகிறேன்!” என்று ஆவேசமாக பதிலளிக்கிறார்.

அப்போது ரோகிணி பரிதாபமாக மனோஜை பார்க்க, மனோஜ் அமைதியாக இருக்கிறார். இதனை அடுத்து, விஜயா “நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன்! மனோஜ், நீயாவது என்னை புரிந்து கொள்!” என்று கெஞ்சுகிறார். ஆனால், மனோஜ் கிட்ட என்ன பேச்சு? வீட்டை விட்டு வெளியே போ!” என்று சொல்லி, ரோகிணியை விஜயா வீட்டை விட்டு வெளியே கழுத்தை பிடித்து தள்ளுகிறார்.

அண்ணாமலை மீண்டும் விஜயாவுடன், “நீ செய்தது தவறு! ரோகிணி செய்தது தவறு, ஆனால் அதைவிட நீ செய்தது தவறு! அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பக்கூடாது!” என்று சொல்ல, முத்துவும் மீனாவும் அதையே கூறுகிறார்கள். ஆனால், விஜயா “யாரும் எதுவும் பேசக்கூடாது!” என்று கடுமையாக கூறுகிறார்.

அப்போது அண்ணாமலை, மனோஜிடம் “நீ போய் ரோகிணியை அழைத்துட்டு வா!” என்று கூற உடனே விஜயா ‘உள்ளே போ’ என பாட்ஷா ரஜினி போல் கட்டளையிட, மனோஜ் உடனே உள்ளே செல்கிறார்.

இதனை அடுத்து, ரோகிணி தன்னுடைய தோழி வித்யா வீட்டுக்கு சென்று நடந்ததை கூறுகிறார். வித்யாவும் “எத்தனை நாள் தான் ஒரு நல்லவங்க குடும்பத்தை ஏமாற்றுவாய்? கடவுளுக்கே பொறுக்கவில்லை, அதனால்தான் கடவுள் காட்டி கொடுத்துவிட்டார்! உண்மை ஒருநாள் வெளியே வந்தே தீரும்!” என்று கூறுகிறார்.

ஆனால், ரோகிணி “என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள்! நான் செய்தது தப்பு என்றால், அவர்கள் செய்ததும் தப்புதான்.  எனக்கு கிடைத்த வாழ்க்கையை நான் அவ்வளவு லேசில் விட்டுக் கொடுக்க மாட்டேன்! கண்டிப்பாக அந்த வீட்டில் நான் வாழ்வேன்! மனோஜுடன் எப்படி வாழ வேண்டும் என்று எனக்குத் தெரியும்!” என்று தீர்மானமாக கூறுகிறாள்.

வித்யா “எப்படி?” என்று கேட்க, “நிச்சயமாக என்னுடைய மாமனார் என்னை அழைத்து வர ஏதாவது ஏற்பாடு செய்வார். நான் அந்த வீட்டுக்குள் மட்டும் சென்று விட்டால் போதும்! அதன் பிறகு மனோஜை என் கைக்குள் கொண்டு வந்து விடுவேன்!” என்று சூழ்ச்சியுடன் கூறுகிறாள்.

“அது எப்படி முடியும்? மீனாவை விட உன்னை மோசமாகத்தான் உன் மாமியார் நடத்துவார்!” என்று வித்யா அதிர்ச்சியுடன் கூற, , ரோகிணி “அது உண்மைதான்! ஆனாலும், இந்த வாழ்க்கையை நான் அவ்வளவு லேசாக விட்டுக் கொடுக்க மாட்டேன்!” என்று சவால் விடுகிறாள்.

இந்த நிலையில், முத்துவும் மீனாவும் சோகமாக உட்கார்ந்திருக்க, மனோஜ் அடிக்கடி வந்து தண்ணி குடித்துக் கொண்டு இருக்கிறார். அப்போது அண்ணாமலை வந்து, “நீ போய் உன் மனைவியை கூட்டிட்டு வா!” என்று மீண்டும் மனோஜிடம் கூறுகிறார். ஆனால் மனோஜ் “முடியாது! என்னுடைய அம்மா சொன்னாதான் கூட்டிக்கொண்டு வருவேன்!” என்று மனதில் அடம்பிடிக்கிறார். இதனுடன், இன்றைய எபிசோடு முடிகிறது.

நாளைய எபிசோடில்… தன்னுடைய நண்பருடன் மனோஜ் சரக்கு அடிக்கும் நிலையில்,  முத்துவுடன் மோதிய போலீஸ்காரரிடம் மாட்டிக்கொள்கிறார். அப்போது, “என் தம்பி யார் தெரியுமா?” என்று கேட்பது உடன்  முடிகிறது!