ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பேஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்துத்துவா நரேட்டிவ் தான் காரணம் என பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா கேவலமாக அரசியல் செய்ததற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்
காங்கிரஸ் தலைவி பிரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா பரபரப்பான ஒரு அறிக்கையில், 26 பேரை பலிகொண்ட பேஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நாட்டில் வளர்ந்து வரும் “இந்துத்துவ நரேட்டிவ்”தான் காரணம் என தெரிவித்துள்ளார்.
“இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இது மிகவும் வேதனையானது. ஆனால், நமது நாட்டில் இந்த அரசு இந்துத்துவத்தை பேசுகிறது. இதனால் சிறுபான்மையினர் அச்சம் மற்றும் அசௌகரியத்தில் இருக்கின்றனர்.
இந்த தாக்குதல் நாட்டில் உருவான அடையாள அடிப்படையிலான பிளவுகளால் ஏற்பட்டுள்ளது. அதற்குப் பொறுப்பாக தற்போதைய அரசின் நடவடிக்கைகளே காரணம்.
“இந்த தாக்குதலை பாருங்கள். அவர்கள் மனிதர்களின் அடையாளத்தை வைத்து தாக்குகிறார்கள் என்றால், ஏன் அப்படிச் செய்கிறார்கள்? ஏனெனில், நமது நாட்டில் ஹிந்து-முஸ்லிம் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் இத்தகைய அமைப்புகள், ஹிந்துக்கள் தான் முஸ்லிம்களுக்கு பிரச்சனை ஏற்படுத்துகிறார்கள் என நினைக்கக்கூடும்.
மேலும், பிரதமருக்கு இது ஒரு “செய்தியாக” அனுப்புகிறார்கள் என்றால் நாட்டில் பாதுகாப்பு மற்றும் மதச்சார்பற்ற தன்மை குறித்து உறுதி அளிக்கப்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.
“முஸ்லிம்கள் தங்களை பலவீனமாக உணர்கிறார்கள். சிறுபான்மையினர் தங்களை பாதுகாப்பற்றவர்கள் எனக் கருதுகிறார்கள். நம்முடைய நாட்டில் அனைவரும் பாதுகாப்பாகவும் மதச்சார்பற்ற முறையிலும் இருக்கிறோம் என்ற உணர்வை உச்சநிலையிலிருந்து ஏற்படுத்த வேண்டும். இத்தகைய தாக்குதல்கள் இனி நடக்காதிருக்க வேண்டும்,” என்று பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா வலியுறுத்தினார்.
ராபர்ட் வதேரா இவ்வளவு கேவலமாக இந்த பயங்கரவாத தாக்குதலை அரசியலுக்கு பயன்படுத்துவார் என நினைக்கவில்லை என நெட்டிசன்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.