Return and Earn.. பழைய பிளாஸ்டிக் பொருட்கள் கொடுத்தால் பணம்.. புதிய மிஷின் அறிமுகம்..!

By Bala Siva

Published:

பிளாஸ்டிக் கழிவுகளை குப்பையில் போட்டு வரும் நிலையில் அதை தங்களிடம் கொடுத்தால் அதற்கு காசு தருவோம் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று அறிவிப்பு வெளியிட்டதோடு அதற்கான மிஷினும் தயாரித்து ஆங்காங்கே வைத்துள்ளது. இந்த மெஷினில் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளை போட்டால் அதற்குரிய பணம் கிடைக்கும் என்பதால் தற்போது பொதுமக்கள் இந்த பிளாஸ்டிக் பாட்டில்களை குப்பையில் போடாமல் இந்த மிஷினில் போட்டு சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது.

பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதற்குரிய குப்பையில் போடாமல் மொத்தமாகத்தான் பொதுமக்கள் போட்டு வருகின்றனர். இந்த நிலையில் பழைய பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்கள். கண்ணாடி பாட்டில்கள். குளிர்பான பாட்டில்கள் ஆகியவற்றை சேகரித்து கொடுத்தால் அதன் எண்ணிக்கை ஏற்ப பணம் தரப்படும் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த நியூ சவுத் வேல்ஸ் அரசு அறிவித்துள்ளது.

இதன்படி பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளை மெஷின்களில் போட்டு மொபைல் செயலியில் அதற்குரிய தகவலை தெரிவித்தால் காசு கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் தற்போது ஆர்வத்துடன் இதில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் ஆர்வத்துடன் பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை இந்த மிஷினில் போட்டு பணம் சம்பாதித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் இந்த சேவைக்காக அரசுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், Return and Earn என்ற செயலியை ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க, பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வதை ஊக்கப்படுத்த இந்த திட்டம் மிகப்பெரிய அளவில் கை கொடுத்து வருவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல் ஆஸ்திரேலியா முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் இந்தியா உள்பட உலகம் முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பிளாஸ்டிக் கழிவுகள் சரியான இடத்திற்கு போய் சேரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.