சேமிப்பு என்பது இளமையில் இருந்தே இருக்க வேண்டும் என்பதும், அது மட்டுமின்றி சம்பளம் உயர உயர சேமிப்பின் தொகையும் உயர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. ஆடம்பர செலவை நீக்கி, அத்தியாவசிய செலவு மட்டும் செய்து, மாதம் ₹5,000 முதல் ₹10,000 வரை கட்டாயம் சேமிக்க தொடங்க வேண்டும்.
அதன் பின் ஒவ்வொரு வருடமும் சம்பளம் உயரும் போது, சேமிப்பின் தொகையை அதிகரித்து கொண்டே வந்தால், நிச்சயம் ஓய்வு காலத்தில் 1 கோடி முதல் 5 கோடி வரை அவரவர் சேமிப்புத் திறனுக்கு பொறுத்து கிடைக்கும்.
அதன்பின், SWP (Systematic Withdrawal Plan) முறையில் நமது ஒரு கோடி ரூபாய் சேமிப்பை முதலீடு செய்து விட்டால், அதிலிருந்து நமக்கு குறைந்தது மாதம் ₹70,000 வருமானம் வந்து கொண்டே இருக்கும்.
ஓய்வுக்கு பின் எந்த விதமான வேலையும் செய்யாமல் மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்க்கை கிடைக்கலாம். எனவே, முன்னோர்கள் இளமையில் கல் என சொல்லியது போலவே, இளமையில் சேமி என்பதையும் சேர்த்து வேண்டும் என்றும், இளமையில் சேமித்த பணத்தை முதுமையில் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்றும் முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர்.