சியாமி நிறுவனம் ஸ்மார்ட்போன் மட்டும் இன்றி ஸ்மார்ட்ஃபோனுக்கு தேவையான சில சாதனங்களையும் உற்பத்தி செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சியாமி தயாரிப்பில் Redmi buds 4 Active என்ற சாதனம் சியாமி 12 சீரிஸ் உடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.2999 என்ற விலையில் அறிமுகமாகும் இந்த சாதனம் குறித்த சிறப்பு அம்சங்களை தற்போது பார்ப்போம்.
Redmi Buds 4 Active ஆனது சியாமி 12 சீரிஸ் உடன் இணைந்து இந்தியாவில் இம்மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த இயர்பட்கள் கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்: . இதன் விலை ரூ2,999 மட்டுமே
Redmi Buds 4 Active ஹைப்ரிட் ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் என்ற சிறப்பு அம்சத்தை கொண்டுள்ளதால் 35dB வரை சத்தத்தை தடுக்கும். ஆனால் அதே நேரத்தில் உங்களுக்குத் சுற்றுப்புற ஒலி தேவைப்பட்டால் அதை கேட்கவும் அனுமதிக்கும்.
12மிமீ டைனமிக் ட்ரைவர் மற்றும் புளூடூத் 5.3 ஆகிய அம்சங்களை கொண்ட இந்த Redmi Buds 4 Active நீண்ட பேட்டரி ஆயுளையும் கொண்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 6 மணிநேரம் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 16 முதல் இந்தியாவில் அறிமுகமாகும் இந்த இயர்பட்கள் மலிவு விலையில், வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
Redmi Buds 4 Active இன் சில முக்கிய அம்சங்கள் இதோ:
* ஹைப்ரிட் ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் (ANC) 35dB வரை சத்தத்தைத் தடுக்கும்
* உங்களுக்குத் தேவைப்படும்போது சுற்றுப்புறச் சத்தத்தைக் கேட்க அனுமதிக்கும்
* 12மிமீ டைனமிக் டிரைவர்
* புளூடூத் 5.3
* நீண்ட பேட்டரி ஆயுள் (ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணிநேரம் வரை, சார்ஜிங் கேஸில் 30 மணிநேரம் வரை)
* இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்: கருப்பு மற்றும் வெள்ளை
* விலை ரூ.2,999
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
