ரியல்மீ நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு புதுப்புது மாடல் ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ரியல்மீ சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன் தான் Realme Narzo N53. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்து தற்போது பார்ப்போம்.
Realme Narzo N53 ஸ்மார்ட்போன் MediaTek Helio G96 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 90Hz புதுப்பிப்பு அம்சங்களுடன், 6.6-இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்ளேவுடன் அறிமுகமாகியுள்ளது. 50MP பிரதான சென்சார், 8MP அல்ட்ராவைட் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் கொண்ட மூன்று கேமராக்கள் பின்புறத்திலும் 16எம்பி கேமிரா செல்பிக்காகவும் உள்ளது.
Realme Narzo N53 ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சங்களுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Realme UI 3.0 இல் இயங்குகிறது. மேலும் இந்தியாவில் Realme Narzo N53 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு ஸ்டோரேஜ் கொண்ட மாடல் விலை ரூ.8,999 என்ற விலைஇயில் விற்பனையாகி வருகிறது.
Realme Narzo N53 ஸ்மார்ட்போனி சில முக்கிய விவரக்குறிப்புகள் இங்கே:
* 6.6-இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்ளே, 90Hz அம்சங்கள்
* MediaTek Helio G96 பிராஸசர்
* 4ஜிபி/6ஜிபி ரேம்
* 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ்
* 50MP பிரதான சென்சார், 8MP அல்ட்ராவைடு சென்சார், 2MP மேக்ரோ சென்சார் கொண்ட 3 பின்புற கேமிராக்கள்
* 16MPசெல்பி கேமிரா
* 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி
* ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Realme UI 3.0 ஆப்பரேட்டிங் சிஸ்டம்
சிறந்த பிராஸசர், பெரிய டிஸ்ப்ளே மற்றும் நல்ல கேமரா அமைப்புடன் கூடிய பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போனைத் தேடுபவர்களுக்கு Realme Narzo N53 ஒரு சிறந்த தேர்வாகும். மீடியா டெக் ஹீலியோ ஜி96 செயலி தேவைக்கேற்ப கேம்களைக் கையாளும் திறன் கொண்டிருப்பதால், கேமர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.