முதல் நாளில் 60,000, 2 நாட்களில் 2 லட்சம் விற்பனை.. அப்படி என்ன இருக்கு Realme 11 ஸ்மார்ட்போனில்?

By Bala Siva

Published:

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Realme தனது புதிய தயாரிப்பான Realme 11 Pro 5G என்ற மாடலை ஜூன் 17ஆம் தேதி இந்தியாவில் வெளியிட்ட நிலையில் முதல் நாளில் 60 ஆயிரம் யூனிட்டுகள் விற்பனை செய்து சாதனை செய்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் முதல் நாளை விட இரண்டாவது நாளில் இரு மடங்கு அதிகமாக விற்பனை செய்து உள்ளதாகவும் முதல் இரண்டு நாளில் இந்த ஸ்மார்ட் போன் 2 லட்சம் யூனிட்டுகள் விற்பனை செய்து சாதனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Realme 11 Pro 5G மற்றும்Realme 11 Pro+ 5G ஆகிய இரண்டு மாடல்களும் இந்திய பயனாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது ஆச்சரியமான ஒரு அம்சமாக கருதப்படுகிறது.

Realme 11 Pro 5Gயின் விலை ரூ.23,999 என்றும், Realme 11 Pro+ 5Gயின் விலை ரூ.29,999 என்றும் இந்தியாவில் Flipkart மற்றும் realme.com மூலம் விற்பனையாகி வருகின்றன.

Realme இன் CMO மாதவ் ஷெத், ஒரு அறிக்கையில், Realme 11 Pro மாடல் ஸ்மார்ட்போன் இந்தியா முழுவதும் உள்ள நுகர்வோரிடமிருந்து ஒரு அற்புதமான வரவேற்பை பெற்றுள்ளது. பயனர்களின் அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

Realme 11 Pro ஸ்மார்ட்போனின் வெற்றியானது இந்தியாவில் 5G ஸ்மார்ட்போன்களின் பிரபலமடைந்து வருவதற்கு ஒரு சான்றாகும். வரும் ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய 5G சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Realme 11 Pro தொடரின் சில முக்கிய அம்சங்கள் இதோ:

* MediaTek Dimensity 7050 பிராஸசர்

* 120Hz AMOLED டிஸ்ப்ளே

* 65W வேகமான சார்ஜிங்

* 50எம்பி டிரிபிள் ரியர் கேமரா

* 16எம்பி செல்பி கேமரா

* ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்