தங்க கடத்தல் நடிகை ரன்யாவுக்கு ரூ.138 கோடி மதிப்பு தொழிற்சாலை சொந்தமா? அதிர்ச்சி தகவல்..!

  பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் சமீபத்தில் துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ₹138 கோடி மதிப்புள்ள தொழிற்சாலை ஒன்று அவருக்கு சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல்…

ranya rao

 

பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் சமீபத்தில் துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ₹138 கோடி மதிப்புள்ள தொழிற்சாலை ஒன்று அவருக்கு சொந்தமானது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு பாஜக அரசு இந்த நிலத்தை ஒதுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலத்தில் ரன்யாராவும், அவரது சகோதரரும் ₹138 கோடி மதிப்பில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

கர்நாடக தொழில் துறை வாரியத்தின்  தலைமை நிர்வாகி, ரம்யா ராவ் தொடர்புடைய தொழிற்சாலைக்கு 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார்.

இந்த நிறுவனம் ஸ்டீல் TMT பார்கள், ராடுகள் மற்றும் தொடர்புடைய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க இருப்பதாகவும், ₹138 கோடி முதலீட்டில் உருவாகும் இந்த திட்டம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அரசுக்கு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தொழிற்சாலை 2022 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாகவும், பெங்களூருவில் தலைமையகம் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்குப் பின்னால் சில அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் இருக்கலாம் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.