’கூலி’ ரூ.1000 கோடி வசூல் செய்யுமா? ஒரே ஒரு தவறு மட்டும் நடந்துவிட்டால் ‘தக்லைஃப்’ கதி தான்.. பெரிய படங்களுக்கு ஏற்பட்டுள்ள பயங்கர சிக்கல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி…

Rajinikanth Coolie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவிட்டால் படம் வசூல் சாதனை செய்யும் என்றும், ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டால், ‘தக்லைஃப்’ படத்தின் கதிதான் ஏற்படும் என்றும் சினிமா டிராக்கர்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல் முறையாக ரஜினிகாந்தின் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு, அனிருத்தின் இசை, சூப்பர் ஸ்டார் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி என பல்வேறு அம்சங்கள் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அதுமட்டுமின்றி, நாகார்ஜுனா உட்பட பல பிரபலங்கள் இந்தப் படத்தில் இணைந்து நடிப்பது, படத்தின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இந்த படம் மட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சரியான அளவில் பூர்த்தி செய்தால், மிகப்பெரிய வசூல் சாதனை செய்யும் என்றும், கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாயை தொட்டுவிட வாய்ப்பு இருப்பதாகவும் சினிமா டிராக்கர்கள் கூறுகின்றன. ஆனால், அதே நேரத்தில், இவ்வளவு பெரிய நட்சத்திர கூட்டம் இருந்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப்பூர்த்தி செய்யவில்லை என்றால், மிகப்பெரிய அளவில் நெகட்டிவ் கமெண்ட்டுகள் உருவாகி, ‘தக்லைஃப்’ படத்தை விட மோசமான ரிசல்ட்டை கொடுக்கும் என்றும் அதே சினிமா டிராக்கர்கள் கூறி வருகின்றன.

சின்ன படத்திற்கு எந்தவிதமான எதிர்பார்ப்பும் இருக்காது. எனவே, ‘ஓப்பன் மைண்ட்’ உடன் தியேட்டருக்கு செல்வார்கள். படம் நன்றாக இருந்தால், அந்த படம் ஒரு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மாதிரி வெற்றி பெறும். ஆனால், நன்றாக இல்லை என்றாலும் பெரிய ஏமாற்றம் இருக்காது. ஆனால், இது பெரிய படங்களுக்குப்பொருந்தாது. பெரிய படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை படக்குழுவினர் பூர்த்தி செய்யவில்லை என்றால், படம் பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆத்திரம் வரும். அதன் காரணமாக எதிர்மறை விமர்சனங்கள் வரும்; அதனால் படம் ‘மண்ணைக் கவ்விவிடும்’ என்றும் கூறி வருகின்றனர்.

மொத்தத்தில், பெரிய படங்களுக்கு இருக்கும் ரிஸ்க் என்னவெனில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாகப் பூர்த்தி செய்ய வேண்டும். இல்லை என்றால் அந்தப் படம் படுதோல்வி அடையும் என்றே கூறப்பட்டு வருகிறது.

ரஜினியின் ‘கூலி’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனை செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.