நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருவது, அதிமுக-பாஜக கூட்டணியை விட ஆளும் திமுக கூட்டணிக்குத்தான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஒருவேளை திமுக இந்த தேர்தலில் தோல்வியடைந்தால், அது கண்டிப்பாக அதிமுக-பாஜக கூட்டணியால் இருக்காது என்றும், விஜய்யால் தான் இருக்கும் என்றும் பல அரசியல் வியூக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
திமுக தலைமை, இரண்டாம் முறையாக ஆட்சி அமைப்பது மட்டுமின்றி, உதயநிதியின் வாரிசு அரசியலுக்கும் விஜய்யால் சிக்கல் நேர்ந்துவிடும் என்று அச்சப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, விஜய்யை ஆரம்ப கட்டத்திலேயே தோல்வியடைய செய்து அரசியலை விட்டு அனுப்பிவிட்டால், அதன் பிறகு திமுகவுக்கு சிக்கல் இருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான், விஜய்க்கு எதிராக ரஜினியை களம் இறக்க திமுக திட்டமிட்டிருப்பதாகவும், அதனால்தான் ரஜினியை கமல்ஹாசன் சந்தித்திருப்பதாகவும் ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திற்கு ரஜினி ஒரு படம் நடித்து தர வேண்டும் என்று ரஜினியிடம் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கு ரஜினி ஆலோசனை செய்து கொள்வதாக கூறி இருப்பதாகவும் தெரிகிறது.
இதற்கு ரஜினி ஒருவேளை ஒப்புக்கொண்டால், மகாராஜா பட இயக்குநர் நிதிலன் சாமிநாதன் தான் இயக்குநராக இருப்பார் என்று கூறப்படுகிறது. அரசியல் நெடியும் கலந்த கதை அம்சமாக இந்தப் படம் இருக்கும் என்றும், இந்த படத்தில் ரஜினி நடித்தால் அதை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்தால், அவர் திமுகவுக்கு ஆதரவு தருவது போல் ஒரு மறைமுக மெசேஜ் வாக்காளர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் செல்லும் என்பது திமுகவின் திட்டமாக உள்ளது. இதற்கு கமல்ஹாசனும் உடந்தை என்பதால், கமல்-ரஜினி ஆகிய இருவருமே விஜய்க்கு எதிராகக் காய் நகர்த்துவார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
“என்னதான் கமல், ரஜினி ஆகிய இருவரையும் திமுக விஜய்க்கு எதிராக இறக்கிவிட்டாலும், அந்த அரசியல் கணக்குகளை எல்லாம் விஜய் ஜீரோ ஆக்குவார் என்றும், மக்கள் விஜய் பக்கம் தான் இருக்கிறார்கள்” என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் கூறி வருகின்றனர்.
மேற்கண்டவை எல்லாம் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வதந்திகளாக இருப்பதால், அவை உண்மையாகவே செய்திகளாக மாறுமா அல்லது வதந்தியாகவே மறைந்து போகுமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
