இன்றெல்லாம் உலக அளவில் வைரல் ஆவதற்கு அல்லது நம்மைப் பற்றி பேசுவதற்கோ ஒரு ஐந்து அல்லது பத்து வினாடிகள் வீடியோ இருந்தாலே போதுமானதாக உள்ளது. அந்த அளவுக்கு சமூக வலைதளங்கள் இன்று மக்கள் மத்தியில் மிகப் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் செல்போன் இல்லாமலும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களில் ஒரு அக்கவுண்ட் இல்லாமல் இருக்கும் நபர்களை விரல் விட்டு எண்ணிவிடும் அளவிற்கான சூழல் தான் உள்ளது.
ஒவ்வொரு நாளிலும் சமூக வலைத்தளங்களில் எண்ணிக்கையில் அடங்காத அளவுக்கான வீடியோக்களும், செய்திகளும் பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வரும் நிலையில் தான் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரின் வீடியோவும் இணையத்தை அதிகம் ஆக்கிரமித்து வருவதுடன் பலரது லைக்குகளையும் அள்ளி வருகிறது.
கவனம் ஈர்த்த ராஜஸ்தான் பெண்
இன்று பலரும் சமூக வலைதளங்களில் தங்களது வீடியோக்களையும், புகைப்படங்களையும் மிக கேஷுவலாக வெளியிட்டு வரும் நிலையில் சிலர் கேமராவையோ அல்லது வீடியோவையோ பார்ப்பதற்கே கூச்சப்பட்டு கொண்டே தான் இருக்கின்றனர். கிட்டத்தட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இந்த பெண்ணும் கேமராவை பார்ப்பதற்கோ அதில் வீடியோ பதிவு செய்யும்போது மிக வெட்கத்துடன் தான் எதிர்கொள்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் சூழலில் அங்கே அந்த ஊரின் கலாச்சாரத்துடன் நிற்கும் இளம் பெண்ணின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளத்தில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அந்த பெண் மிக சாதாரணமான உடை அணிந்து கொண்டு அந்த வீடியோவை பதிவு செய்தவருடன் சிரித்துக்கொண்டே கூச்சப்படும் தன்னை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.
இந்திய அழகு..
ஜோதி என தனது பெயரை சொல்லும் போது கூட சிரித்துக் கொண்டே அவர் சொல்வதும் அதே நேரத்தில் இந்திய நாட்டின் அழகை பிரதிபலிக்கும் வகையில் அந்த பெண் இருந்ததும் தான் தற்போது பலரது லைக்குகளை அள்ளுவதற்கு காரணமாக உள்ளது இயற்கையான அழகுடன் அந்த பெண் சிரித்து கொண்டே பேசும் இந்த வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருவதுடன் மேக்கப்புடன் தங்கள் அழகை நிரூபிக்கும் நடிகைகளை விட இவர் ஏழ்மை பின்னணியில் இயற்கை அழகு பெற்று பொலிவுடன் விளங்குவதாகவும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் பெண் வைரலாகி வரும் நிலையில், அங்கே வரும் சுற்றுலா பயணிகள் கூட அவருடன் செல்ஃபி எடுத்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் இந்த பெண்ணின் இயற்கையான அழகை பலர் பாராட்டினாலும் இன்னொரு பக்கம் அவர் அதிகம் மேக்கப் போட்டிருப்பதாகவும் சிலர் எதிர்மறை கருத்துக்களை தெரிவிக்காமலும் இல்லை.
View this post on Instagram