எக்கேடும் கெட்டு போங்க.. தமிழ்நாடு அரசியலே எனக்கு வேண்டாம்.. தமிழ்நாட்டில் இருந்து யார் வந்தாலும் அப்பாயின்மெண்ட் கிடையாது.. பிரச்சாரத்திற்கும் வரமாட்டேன்.. தமிழக காங்கிரஸை திமுகவின் கிளை கழகம் போல் மாற்றி என்னவோ பண்ணிட்டு போங்க.. வெறுப்ப்பின் உச்சத்தில் இருக்கின்றாரா ராகுல் காந்தி?

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் மற்றும் குறித்து ராகுல் காந்தி எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில கசப்பான சம்பவங்களுக்கு பின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசியலில் ராகுல் காந்திக்கு இருக்கும் ஈடுபாடு…

rahul gandhi sad

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் மற்றும் குறித்து ராகுல் காந்தி எடுத்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில கசப்பான சம்பவங்களுக்கு பின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசியலில் ராகுல் காந்திக்கு இருக்கும் ஈடுபாடு 0% என்ற அளவிலேயே இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து செல்லும் தலைவர்களுக்கு அப்பாயிமெண்ட் வழங்கப்படுவதில்லை என்றும், இங்கிருந்து வரும் கோரிக்கைகளை அவர் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே புகைந்து கொண்டிருக்கும் ஒரு பெரும் அதிருப்தியாகும். இந்த நிலைப்பாடு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை திமுகவின் ஒரு கிளை நிறுவனம் போல மாற்றும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகச் செயல்படும் செல்வப்பெருந்தகை போன்றவர்கள், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை விட திமுகவின் விருப்பங்களுக்கு இணங்கி செயல்படுவதிலேயே அதிக ஆர்வம் காட்டுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. காங்கிரஸிற்குள் திமுகவின் ‘நிழல்’ மனிதர்கள் ஊடுருவி, கட்சியின் தனித்துவத்தை சிதைத்து வருவதாக தெரிகிறது. பாரம்பரிய காங்கிரஸ்காரர்கள் பலர் ஓரங்கட்டப்பட்டு, திமுகவுக்கு ஜால்ரா அடித்து காங்கிரஸ் மேடைகளில் பேசுபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது ஒரு தேசியக் கட்சியின் அடையாளத்தையே அழிக்கும் வேலையாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்களே திமுக ஆதரவாளர்களாகிவிட்டார்களே என்ற சந்தேகம் ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸிற்கு விசுவாசமாக இருப்பதை விட, திமுகவின் ஆதரவுடன் தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள ப. சிதம்பரம் முயல்வதாகவே கூறப்படுகிறது. ஒருவேளை காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு முறிந்தால், ப. சிதம்பரம் போன்றவர்கள் தனிக்கட்சி ஆரம்பித்து திமுகவுடன் பயணித்து இருக்கவும் தயங்கமாட்டார்கள் என்ற சூழலே நிலவுகிறது.

தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் திமுக காட்டும் மேலாதிக்க போக்கை ராகுல் காந்தி கண்டுகொள்ளாமல் விட்டது, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிமணி போன்ற தலைவர்கள் ‘வெளிப்படைத்தன்மை இல்லை’ என்று வெடிப்பது, கட்சிக்குள் நிலவும் அந்த அதிருப்தியின் வெளிப்பாடே ஆகும். கடந்த முறை 25 இடங்களைப் பெற்று 18 பேரை வெற்றி பெறச் செய்த காங்கிரஸிற்கு, இந்த முறை 28 இடங்கள் கொடுக்கப்பட்டாலும், அவை வெற்றிபெற வாய்ப்பில்லாத தொகுதிகளாகவே ஒதுக்கப்படுகின்றன. செல்வப்பெருந்தகை போன்றவர்கள் ‘கவுண்ட்’ முக்கியம் என்று எதை கொடுத்தாலும் வாங்கிக்கொள்வது, காங்கிரஸின் வெற்றியை விட ஸ்டாலினின் கணக்குகளுக்கே அதிகம் துணைபோவதாக உள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனது தனித்துவத்தை இழந்து, திமுகவின் நிழலில் ஒதுங்கும் ஒரு கட்சியாக மாறிவருவது அந்த கட்சியின் வீழ்ச்சியாகவே கருதப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 4% வாக்குகள் மட்டுமே உள்ளது. தவெகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வளர அதிக வாய்ப்பு இருந்தது. அதை தான் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் விரும்பினார்கள். ஆனால் தவெகவுடன் கூட்டணி வைத்தால் இன்னொரு தமிழ் மாநில காங்கிரஸ் உருவாகும் என ராகுல் காந்தியை சில முக்கிய தலைவர்கள் மிரட்டியதாகவும், அதன்பின்னர் தான் சோனியா காந்தி தலையீட்டில் வேறுவழியில்லாமல் திமுக கூட்டணிக்கு சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் வரும் தேர்தலில் தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் ராகுல் காந்தியும் ப்ரியங்கா காந்தியும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவார்களா? என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.