ரிஸ்க் எடுக்காமல் ரஸ்க் சாப்பிட முடியாது.. விஜய்யுடன் கூட்டணி.. ராகுல் காந்தி ஓகே.. சோனியா காந்தி தயக்கம்? ரிஸ்க் எடுக்குமா காங்கிரஸ்?

வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் உடன் கூட்டணி சேர ராகுல் காந்தி கிட்டத்தட்ட ஓகே சொல்லிவிட்டதாகவும், ஆனால் சோனியா காந்தி ஆழ்ந்த யோசனையிலும், தயக்கத்திலும் இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

vijay rahul

வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் உடன் கூட்டணி சேர ராகுல் காந்தி கிட்டத்தட்ட ஓகே சொல்லிவிட்டதாகவும், ஆனால் சோனியா காந்தி ஆழ்ந்த யோசனையிலும், தயக்கத்திலும் இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்களவையில் தற்போது எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி இருக்கும் நிலையில், அவருக்கு முழு ஆதரவாக திமுக எம்.பி.க்கள் இருக்கின்றனர். ஆனால், திமுக கூட்டணியில் இருந்து விலகி விஜய் கட்சியுடன் கூட்டணி வைத்தால் மக்களவையில் திமுக ஆதரவு கிடைக்காது என்ற அச்சம் சோனியா காந்திக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, விஜய்யுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தால், ஒருவேளை அது “கிளிக்” ஆகவில்லை என்றால், அடுத்தடுத்த தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி வைப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் சோனியா காந்தி மிகவும் யோசிப்பதாக தெரிகிறது.

ஆனால், அரசியலை பொறுத்தவரை ரிஸ்க் எடுத்தால்தான் ஆக வேண்டும்; ரிஸ்க் எடுக்காமல் தயங்கிக்கொண்டே ஒரே முடிவை ஆண்டுக்கணக்கில் எடுத்து கொண்டிருந்தால் கட்சி வளராது என்பது ராகுல் காந்தியின் எண்ணமாக உள்ளது. “இதுவரை அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி வைத்து கொண்டிருந்தோம், ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி சுத்தமாக வளரவே இல்லை. இந்த நிலையில் தற்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆட்சியிலும் பங்கு கிடைக்க நல்ல சான்ஸ் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. இதை பயன்படுத்தாவிட்டால் அடுத்ததாக காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் கூட்டணி ஆட்சியில்கூட பங்கு கொள்ள முடியாமல் போய்விடும்” என்று ராகுல் காந்தி தரப்பிலிருந்து கூறப்படுவதாக தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும், நிர்வாகிகளும் கூட “இந்த முறை ரிஸ்க் எடுத்துப் பார்க்கலாம், ரிஸ்க் எடுக்காமல் ரஸ்க் சாப்பிட முடியாது” என்று தலைமைக்கு அறிவுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தொண்டர்களும் தங்கள் விருப்பத்திற்குரிய தலைவர்கள் அமைச்சராக வேண்டும், துணை முதல்வராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதாகவும், தொண்டர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் தலைமை இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

எனவே, வரும் தேர்தலில் எதிர்கால கணக்குகளை எல்லாம் போடாமல், 2026 தேர்தலை மட்டும் கணக்கில் கொண்டு ரிஸ்க் எடுப்பதுதான் சரியானது என்று கூறப்பட்டு வருகிறது. இருப்பினும், இறுதி முடிவு எடுக்க வேண்டியது ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திதான் என்பதால் அவர்கள் இருவரும் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.