வாத்தி கம்மிங்.. புதின் இந்தியா வரும்போது நடக்க போகும் சம்பவம்.. டிரம்ப் நீ இந்தியாவின் இன்னொரு முகத்தை பார்த்ததில்லை.. பார்த்தா தாங்க மாட்ட..!

இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் மற்றும் இந்தியாவின் இராஜதந்திர நகர்வுகள் பற்றி அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகளும் கூர்ந்து கவனித்து வருகின்றன. இந்த மூன்று நாடுகளும்…

modi putin1

இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் மற்றும் இந்தியாவின் இராஜதந்திர நகர்வுகள் பற்றி அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகளும் கூர்ந்து கவனித்து வருகின்றன. இந்த மூன்று நாடுகளும் ஒன்று சேர்ந்தால், அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளும் இனி இந்த மூன்று நாடுகள் சொல்வதை தான் கேட்க வேண்டிய நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்பட்டுள்ளது.

இந்தியா – சீனா உறவுகள்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சமீபத்தில் இந்தியாவிற்கு வந்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்புகளுக்கு பிறகு, வர்த்தகம், விமான போக்குவரத்து மற்றும் அரிய வகை கனிமங்கள் சுரங்கம் போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள், எல்லை பிரச்சினைகளையும் தீர்க்க ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா – ரஷ்யா உறவுகள் மற்றும் அமெரிக்காவின் தடைகள்

இந்த நிலையில் தான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்யாவிற்கு விஜயம் செய்ததை தொடர்ந்து, அமெரிக்கா விதித்துள்ள வரிகளுக்கு உட்படாத இந்திய பொருட்களை வாங்குவதற்கு ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை இந்த நிகழ்வு வெளிப்படுத்துகிறது. ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது அமெரிக்கா தடைகளை விதித்தாலும், சீனாவுக்கு 90 நாள் கால அவகாசம் அளித்ததுடன், ரஷ்யாவிடமிருந்து எரிவாயு மற்றும் எண்ணெய் வாங்கும் ஐரோப்பிய நாடுகள் மீது எந்த தடையும் விதிக்கவில்லை.

புடின் வருகை மற்றும் ‘பிரிக்ஸ்’ நாடுகளின் எழுச்சி

அடுத்த திருப்பமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவிற்கு வர உள்ளார். இந்த விஜயத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் பண பரிவர்த்தனை முறையை மேம்படுத்துவது குறித்து பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, தனது கரன்சியான டாலரை ஒரு அச்சுறுத்தல் கருவியாக பயன்படுத்துவதால், ‘பிரிக்ஸ்’ நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்தி கொள்கின்றன. இந்த நாடுகள், அமெரிக்க டாலரை சார்ந்திருப்பதை குறைப்பதற்காக, ஒரு பொதுவான நாணயம் மற்றும் தங்களுக்கு சொந்தமான வங்கியை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

வரிகள் மற்றும் தடைகள்

வர்த்தகத்தில் லாபம் மற்றும் நஷ்டத்தை நிர்வகிக்க பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக Tariff என்ற பெயரில் அநியாய வரி விதிக்கப்படுகிறது என்றும், ஒரு நாட்டின் நடத்தையை மிரட்டுவதற்கும், செல்வாக்கு செலுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் அரசியல் கருவி தற்போ Sanctions என்ற பெயரிலும் பயமுறுத்தப்படும் நிலையில் இந்தியாவின் இராஜதந்திர நடவடிக்கைகளை அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகிறது.

அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள 25% வரி என்பதை வரியாக பார்க்காமல் இந்தியா மீதான வன்மமாக தான் பார்க்கப்படுகிறது. எனவே தான் இந்தியா, அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்துவிட்டது. ‘வாத்தி’ புதின் இந்தியா வரும்போது அமெரிக்காவின் கொட்டத்திற்கு முடிவு கட்டப்படும். பழைய இந்தியா என நினைத்து ஆட்டம் போடும் டிரம்ப், புதிய இந்தியா எந்த அளவுக்கு ஃபவர்புல் என்பதை பார்ப்பார். இந்தியாவின் இன்னொரு பக்கத்தை பார்த்தால் அவர் தாங்க மாட்டார் என்றே உலக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.