AI தொழில்நுட்பம் என்பது தற்போது உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் நுழைந்துவிட்டது என்பதும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தாத துறையே இல்லை என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். AI தொழில்நுட்பம் காரணமாக பல ஊழியர்கள் வேலை இழந்து வருகின்றனர் என்பதும் AI தொழில்நுட்பம் பல ஊழியர்கள் செய்யும் பணியை ஒரு சில மணி நேரங்களில் செய்து முடித்து விடுவதால் பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
AI தொழில்நுட்பம் என்பது பெரிய நிறுவனங்களில் மட்டுமின்றி தற்போது பள்ளி கல்லூரிகளிலும் நுழைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் பலர் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்வு எழுதுவதாகவும் மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள்களை பேராசிரியர்கள் AI தொழில்நுட்பத்தின் மூலம் திருத்துவதாகவும் கூட குற்றச்சாட்டுகள் உள்ளது
இது குறித்து பல கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில் இந்த நிலை தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் அறிவியல் மற்றும் இயற்கை வள பேராசிரியர் ஒருவர் ChatGPT மூலம் மாணவர்களின் தேர்வு தாளை திருத்தியதாக தெரிகிறது. ஆனால் ChatGPT ஒரு சில விடைத்தாள்களை புறக்கணித்ததாகவும் அந்த விடைத்தாள்கள் AI டெக்னாலஜி பயன்படுத்தி எழுதப்பட்டதாகவும் கூறியுள்ளது.
ஆனால் மாணவர்கள் இந்த கருத்தை மறுத்தனர். ChatGPT தவறாக முடிவு எடுத்திருப்பதாகவும் தாங்கள் AI தொழில்பத்தை பயன்படுத்தி தேர்வு எழுதவில்லை என்றும் வாதிட்டனர். இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து சோதனை செய்து பார்த்தபோது எந்த மாணவரும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்வு எழுதவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து ChatGPT மூலம் தேர்வுத்தாளை திருத்திய பேராசிரியருக்கு எச்சரிக்கை விடப்பட்டதாக தெரிகிறது. AI எப்போதும் மிகச் சரியான முடிவுகளை தராது என்றும் பல சமயங்களில் அது தவறான முடிவுகளை தான் தந்தது உள்ளது மற்றும் சாட்ஜிபிடி போன்ற AI தொழில்நுட்பத்தை முழுவதுமாக நம்பி ஒரு காரியத்தில் ஈடுபட முடியாது என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.
மேலும் மாணவர்களாக இருந்தாலும் பேராசிரியராக இருந்தாலும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் பல்கலைக்கழகம் நிர்வாகம் கூறியுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் உள்ள ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.