பிரிமியம் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட Grok இப்போது அனைவருக்கும்.. எலான் மஸ்க் அறிவிப்பு..!

  எலான் மாஸ்க் அவர்கள் எக்ஸ் தளத்தை வாங்கிய பிறகு பல்வேறு மாற்றங்கள் செய்துள்ள நிலையில், சமீபத்தில் Grok என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும், இதன் மூலம் பல்வேறு விவரங்களை தெரிந்து…

grok

 

எலான் மாஸ்க் அவர்கள் எக்ஸ் தளத்தை வாங்கிய பிறகு பல்வேறு மாற்றங்கள் செய்துள்ள நிலையில், சமீபத்தில் Grok என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும், இதன் மூலம் பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்பது தெரிந்ததே. குறிப்பாக புகைப்படங்களை உருவாக்கிக் கொள்ளலாம் என்பது உள்பட பல அம்சங்கள் இருந்தன. குறிப்பாக வெப் டெவலப்பர்களுக்கு இந்த Grok மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் இந்த வசதி பிரீமியம் எக்ஸ் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எக்ஸ் பயனர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பிரிமியம் பயனர்கள் அல்லாதவர்களுக்கு சில குறிப்பிட்ட மணி நேரம் மட்டுமே குறிப்பிட்ட அளவில் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இரண்டு மணி நேரத்திற்கு 10 இமேஜ்களை பிரிமியம் அல்லாத பயனர்கள் உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் ரூ.6800 ப்ரீமியம் பயனர்கள் கட்டி வரும் நிலையில், தற்போது இலவசமாக சில குறிப்பிட்ட அளவு Grok பயன்பாடு அனைவருக்கும் கிடைத்துள்ளதால், எக்ஸ் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த Grok வசதியை அனைவரும் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற காரணத்தால், இலவச பயனர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றும் இதன் காரணமாக, அதிக இலவச பயனர்கள் பிரிமியம் பயனர்களாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் எலான் மஸ்க் கணித்துள்ளார். அவரது கணிப்பு எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.