இரண்டே வருசத்துல 114 கிலோ குறைச்சாச்சு.. ரசிகர்களை ஏமாற்றி பிரபல யூடியூபர் செஞ்ச வேலை..

By Ajith V

Published:

முன்பெல்லாம் மக்கள் பலரும் ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்த நிலையில் தற்போது ஜங்க் ஃபுட் என்ற பெயரில் நிறைய தேவை இல்லாத உணவுகளையும் நாம் எடுத்துக் கொண்டே தான் இருக்கிறோம். இன்று வேகமாக சுழலும் இந்த உலகுக்கு மத்தியில் பலரும் வீட்டிற்கு வெளியே சென்று உணவு அருந்துவதை தான் பெரிதும் விரும்புகிறோம்.

இதன் காரணமாக நாம் உண்ணும் உணவில் ஆரோக்கியம் இருக்கிறதா என்பதே பெரிய கேள்வியாக இருக்கும் சூழலில், பலரும் ஏதாவது காரணங்களால் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இதற்கு மத்தியில் பலரும் உடல் எடையை அதிகரித்து அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என எந்த சமூக வலைத்தள பக்கங்களை நாம் கவனிக்கும் போது அதில் பலரும் உடல் எடை அதிகரிப்பை குறைப்பதற்கான வழிகள் பற்றி நிறைய பேர் பகிரும் வீடியோவை நாம் காண முடிகிறது. பல இடங்களில் பொதுவான பிரச்சனையாக இந்த உடல் எடை அதிகரிப்பு இருக்கும் நிலையில் யூடியூபில் பிரபலமாக இருக்கும் நபர் ஒருவர் இரண்டே வருடத்தில் 114 கிலோ குறைத்த பின்னணி தான் தற்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

நிக்கோலஸ் பெரி (Nicholas Perry) என்ற நபர் யூடியூபில் பிரபலமாக இருக்கும் சூழலில் இவர் உணவு உண்ணும் வீடியோக்களை அதிகம் பகிர்ந்து வந்துள்ளார். இதனால் அதிக எடை கொண்டும் அவர் விளங்கி வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த எடையை குறைக்க வேண்டும் என்றும் அவர் முடிவு செய்துள்ளார்.

இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் யூடியூபில் பகிர்ந்த வீடியோக்கள் அனைத்தும் பழைய வீடியோவாக இருக்கும் நிலையில் 7 மாதங்களாக எந்த வீடியோவும் அவர் பகிரவில்லை. இதன் மூலம் தான் குண்டாக இருப்பதாகவே ரசிகர்களையும் நம்ப வைத்துள்ளார்.

பார்ப்பதற்கே மிக குண்டாக அவர் இருப்பதால் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்க வேண்டும் என முடிவு செய்து உடல் எடையை குறைத்து வந்த நிக்கோலஸ், தற்போது மிக ஒல்லியாக இருந்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

தனது வாழ்விலேயே தான் செய்த மிகப்பெரிய சோஷியல் எக்ஸ்பிரிமெண்ட் இது என குறிப்பிட்டுள்ளார் நிக்கோலஸ் பெரி. மேலும் இரண்டு ஆண்டுகளில் எந்த வீடியோவும் புதிதாக ஷூட் செய்யவில்லை என்றும் பழைய வீடியோக்களையே யூடியூபில் பகிர்ந்து தனது உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்தி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் நிறைய வேதனைகள் இருந்ததாகவும் குறிப்பிடும் நிக்கோலஸ் பெரி, வேறு எந்த விஷயங்களிலும் கவனத்தை சிதறவிடாமல் 114 கிலோ குறைத்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆச்சரியத்தை தான் கொடுத்துள்ளது. அத்துடன் அவர் குண்டாகவே இருப்பார் என நினைத்து திடீரென அவர் ஒல்லியான வீடியோவை பார்த்த அனைவருக்குமே இன்ப அதிர்ச்சி தான்.