இந்த மாதிரி பூஜை அறையை வச்சுப் பாருங்க.. தெய்வம் நிரந்தரமாக வீட்டிலேயே குடிகொள்ளும்..

இறை நம்பிக்கை உள்ள அனைவரும் தங்களது இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடுகின்றனர். சிலர் வசதிக்குத் தகுந்தாற் போல் வீட்டில் தனி பூஜை அறை வைத்து வழிபடுவது வழக்கம். இந்த பூஜை அறையை எப்படி வைத்திருக்க…

Poojai

இறை நம்பிக்கை உள்ள அனைவரும் தங்களது இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடுகின்றனர். சிலர் வசதிக்குத் தகுந்தாற் போல் வீட்டில் தனி பூஜை அறை வைத்து வழிபடுவது வழக்கம். இந்த பூஜை அறையை எப்படி வைத்திருக்க வேண்டும், பூஜைப் பொருட்களாக வீட்டில் எதை வைக்கலாம் என்பதைத் தெரிந்து கொண்டால் இறைவன் நம் வீட்டிலேயே நிரந்தரமாக வாசம் செய்வார்.

நாம் இறைவனுக்கென நெய்வேத்தியங்கள், பிரசாதங்கள் தயார் செய்யும் போது தனிப் பாத்திரத்தை பயன்படுத்த வேண்டும். நாம் உண்டு கழுவி வைத்த பாத்திரங்களில் இறைவனுக்கு நெய்வேத்தியம் படைக்கக் கூடாது. இதற்காக தனியாகப் பாத்திரங்களை வைத்திருத்தல் நலம்.

வீட்டிலிருந்து கோவிலுக்குச் செல்லும்போது வாசலில் கோலமிட்டு, விளக்கு ஏற்றி வைத்து விட்டுச் செல்ல வேண்டும். முழு மலரால் மட்டுமே எப்போதும் அர்ச்சனை செய்ய வேண்டும். பூவின் இதழ்களை தனியாகப் பிரித்து எடுத்து அர்ச்சனை செய்வது இறை வழிபாட்டிற்கு உகந்தது அல்ல.

மெக்காவில் பிறந்து இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான அபுல் கலாம் ஆசாத்.. கல்வியில் இவ்வளவு சீர்திருத்தங்கள் செய்தது இவரா?

வீட்டில் சுவாமி படங்களுக்கு மலர்கள் போட்டுவிட்டு அவை காயும் முன்னரே எடுத்து விட வேண்டும். அவ்வாறு அதை காயும் வரையில் விட்டு வைத்திருப்பது துரதிர்ஷ்டத்தினை நாமே வரவழைப்பதற்குச் சமம்.

எப்போதும் வெற்றிலையை சுவாமிக்குப் படைக்கும் போது அதில் உள்ள காம்பினை எடுத்துவிடுதல் நலம். ஏனெனில் வெற்றிலையின் காம்பில் மூதேவி வாசம் செய்வதாக ஐதீகம். அதேபோல் வெறும் வெற்றிலை அல்லாமல் உடன் பூ, பாக்கு கட்டாயம் இடம்பெற வேண்டும்.

மேலும் பூஜைக்கு வைக்கப்படும் பொருட்களை வெறுந்தரையில் வைக்கக் கூடாது. ஏதாவது தாம்பூலத்தட்டு, அர்ச்சனைத் தட்டுபோன்றவற்றின் மீது வைத்துத் தான் வழிபட வேண்டும். இதுமட்டுமன்றி பூஜையில் கடவுள் படங்களுடன் கண்ணாடி வைத்திருப்பதும் திருஷ்டியை விரட்டியடிக்கும் சக்தி படைத்தது.

பூஜை அறையை எப்போதும் இருளாக வைத்திருக்கக் கூடாது. குறைந்த பட்சம் விளக்கு அல்லது வாட்ஸ் குறைவான பல்புகளை எரிய விட வேண்டும். சுவாமி படங்களை அவ்வப்போது சுத்தம் செய்து பளிச்சென்று வைக்க வேண்டும். மனதில் நல்ல எண்ணங்களுடன் பூஜை அறையில் நுழைய வேண்டும். குளிக்காமல் எந்த வகையிலும் இறை வழிபாடு செய்வது பலன் தராது.