பொங்கல் பண்டிகை விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா? தமிழக அரசு வெளியிட்ட குட் நியூஸ்..

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14.01.2025 அன்று கொண்டாடப்படும் வேளையில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆகியவற்றை அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில் பொங்கல் பண்டிகை…

Pongal Holiday

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14.01.2025 அன்று கொண்டாடப்படும் வேளையில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆகியவற்றை அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறை குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு..

இவ்வாண்டு தமிழ்நாட்டில் 14.01.2025 செவ்வாய்கிழமை அன்று தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், 15.01.2025, 16.01.2025, 18.01.2025 மற்றும் 19.01.2025 ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள். அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான 17.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

ஒரே ஒரு வீடியோ.. உலக அளவில் வைரலான ராஜஸ்தான் பெண்.. பலரையும் வியக்க வைத்த பின்னணி..

அக்கோரிக்கைகளை ஏற்று, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். மாணவர்கள். அவர்தம் பெற்றோர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், 17.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள். பள்ளிகள். கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 25.01.2025 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்வோர் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே பொங்கல் பண்டிகைக்காக ரயில்கள் அனைத்தும் முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில் தற்போது பேருந்துகளிலும் முன்பதிவு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.