உயிருக்கே அபாயமாக மாறுகிறதா பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்? அதிர்ச்சி தகவல்..!

  பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இவை உயிருக்கே அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் தெரிவித்துள்ளது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

water bottle

 

பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இவை உயிருக்கே அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் தெரிவித்துள்ளது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2024ஆம் ஆண்டு வெளியான ஆய்வு ஒன்றின் முடிவுகளின்படி, பிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கும் நுண்ணுயிரி பொருள்கள் (microplastics) 10 முதல் 100 மடங்கு அதிகமாக காணப்படுகின்றன. மேலும், ஒரு லிட்டர் பாட்டில் குடிநீரில் இரண்டு பிளாஸ்டிக் துகள்கள் அடங்கியிருக்கலாம் என்றும், இதில் 90% வரை மைக்ரோ பிளாஸ்டிக் (microplastics) துகள்களாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவை உடல் திசுக்களில் ஊடுருவி ரத்த ஓட்டத்தில் கலந்து, உடலில் நச்சு வேதிப்பொருட்களை பரப்பும் ஆற்றல் கொண்டதாகும். எனவே, பிளாஸ்டிக் பாட்டில்களை முழுமையாக தவிர்த்து, கண்ணாடி அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாட்டில்களில் தண்ணீரைக் கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் துகள்கள் குழந்தைகள் உருவாகும் கருப்பையில், நுரையீரல் திசுக்களில், மலத்துவாரங்களில் மற்றும் ரத்தத்தில் கூட கலக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில்களால் ஏற்படும் அபாயங்களை தவிர்க்க கண்ணாடி அல்லது மெட்டல் பாட்டில்களில் தண்ணீரைக் கொண்டு செல்ல வேண்டும். ஒருவேளை பிளாஸ்டிக் பாட்டில்கள் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், BPA இல்லாத பாட்டில்களை தேர்வு செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்களை அதிக வெப்ப நிலையில் வைக்கக்கூடாது.

பிளாஸ்டிக் பொருள்களில் உள்ள ரசாயனங்கள் நீரிலும் கலந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். இது புற்றுநோய், சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற ஆபத்துகளை அதிகரிக்கக்கூடும்.

எனவே, முடிந்தவரை பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்த்து, கண்ணாடி, அலுமினியம், டெட்ரா பேக், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், போன்ற பாதுகாப்பான மாற்று உலோகங்களை பயன்படுத்தி, உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!