புதிதாக ஒரு டெக்னாலஜி மக்கள் மத்தியில் பிரபலமானால், அந்த டெக்னாலஜியை ஒரு பெரிய நிறுவனம் விலைக்கு வாங்கி தன் கையில் வைத்துக் கொள்ளும் என்பது காலங்காலமாக நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக Pixelmator என்ற அப்ளிகேஷன் போட்டோ எடிட்டிங் செய்வதற்கு வசதியாக இருந்து வந்த நிலையில், இந்த அப்ளிகேஷனை ஆப்பிள் நிறுவனம் வாங்கி தனது சாதனங்களில் பிரத்யேகமாக வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த Pixelmator செயலியை ஆப்பிள் நிறுவனம் வாங்க முடிவு செய்ததோடு, அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது. எப்.டி.ஏ அனுமதி கிடைத்தவுடன் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் போட்டோ எடிட்டிங் செய்ய போட்டோஷாப் தேவையில்லை என்றும், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த செயலி மூலம் அனைத்து விதமான போட்டோ எடிட்டிங் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.