பி.எஃப் பணத்தை எடுக்க பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. அவை சிக்கலானதாக இருப்பதால், பி.எஃப் பணத்தை உடனே எடுக்க தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் பி.எஃப் பணத்தை எடுக்க பிரத்யேகமாக ஏடிஎம் கார்டு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், எந்தவிதமான விண்ணப்பமும் செய்யாமல், நேரடியாக ஏடிஎம் சென்டர் சென்று பி.எஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
இந்த வசதி, பிஎஃப் பணத்தை பெறுவதற்கான மிக எளிய நடைமுறையாக இருந்தாலும், சேமிப்பு கரையுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த திட்டம் நல்லதா? கெட்டதா? என்ற விவாதம் எழுந்துள்ளது.
வருங்கால பைப்புக்கு நிதி திட்டம் என்ற பெயரில், ஒவ்வொரு மாதமும் சம்பளத்தின் 12% பிடித்தம் செய்யப்படுகிறது. அதற்காக 8.5% வட்டியும் வழங்கப்படுவதால், தொழிலாளர்கள் ஓய்வு காலத்தில் ஒரு மிகப்பெரிய தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
தற்போது சாதாரணமாக பிஎஃப் பணத்தை எடுப்பது இயலாது. திருமணம், குழந்தைகளின் கல்வி, மருத்துவ அவசரம் போன்ற முக்கியமான காரணங்களுக்காக மட்டுமே எடுக்க வேண்டும். மேலும், விண்ணப்பிப்பது தொடங்கி பல்வேறு நடைமுறைகள் உள்ளதால், பணத்தை எடுப்பதில் காலதாமதம் ஏற்படும். சில சமயங்களில், பணமே எடுக்க வேண்டாம் என்ற நிலையும் உருவாகும்.
ஆனால், தற்போது வரும் மே மாதம் முதல் EPFO 3.0 ATM Card திட்டத்தின் படி, ஏடிஎம் கார்டு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 50% பிஎஃப் பணத்தை எப்போது வேண்டுமானாலும் ஏடிஎம் சென்று எடுத்துக்கொள்ளலாம் என்ற வசதி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தால், பணத்தை எடுப்பதில் காலதாமதம் இருக்காது. மேலும், நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இது ஒரு வகையில் தொழிலாளர்களுக்கு நல்லது என்றாலும், சின்ன சின்ன செலவுகளுக்கும் பிஎஃப் பணத்தை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டால், அது சேமிப்புக்கு ஆபத்தாக முடியும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஊழியரும் தங்கள் ஓய்வு காலத்தில் பிஎஃப் பணத்தை மட்டுமே நம்பி இருக்கும் நிலையில், அதில் 50% கரைந்துவிட்டால், அது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.
ஆனால், பணத்தை திட்டமிட்டு முறையாக செலவு செய்பவர்களுக்கு, இந்த பிஎஃப் ஏடிஎம் திட்டம் ஒரு வரப்பிரசாதம் என்று கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
