பைக் முதல் கார் வரை எல்லாம் கோல்டு தான்: 5 கிலோ தங்க நகையுடன் நடமாடும் கோல்ட்மேன்.. !

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஐந்து கிலோ தங்க நகை உடன் நடமாடும் கோல்ட்மேன் ஆக இருக்கிறார் என்பதும் அவருடைய கார் முதல் அணியும் கண்ணாடி வரை அனைத்திலும் கோல்ட் உள்ளது என்றும் கூறப்பட்டு…

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஐந்து கிலோ தங்க நகை உடன் நடமாடும் கோல்ட்மேன் ஆக இருக்கிறார் என்பதும் அவருடைய கார் முதல் அணியும் கண்ணாடி வரை அனைத்திலும் கோல்ட் உள்ளது என்றும் கூறப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவைச் சேர்ந்தவர் பிரேம் சிங், இவர் சிறுவயதிலேயே தங்க நகைகள் மீது விருப்பம் கொண்டதாகவும், சின்ன வயதிலேயே தங்க நகையை அணிந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் பிறகு தான் வளர வளர தங்கத்தின் மீதான ஆசையும் வளர்ந்து கொண்டே வருகிறது என்றும் தற்போது 5.2 கிலோ தங்கத்தை தான் அணிகலன்கள் அணிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கழுத்தில் மட்டுமே அவர் 4 கிலோ அளவுக்கு தங்க நகை அணிந்து இருப்பதாகவும் அவர் அணிந்திருக்கும் தங்க நகையின் மதிப்பு மட்டுமே சுமார் ஒன்றரை கோடி என்றும் கூறப்படுகிறது.

பீகார் மாநிலத்தில் நிதீஷ் குமார் ஆட்சி நடப்பதால் தான் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் 150 முதல் 200 கிராம் வரை என்னுடைய பைக்கில் மட்டுமே தங்கம் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கண்ணாடி பிரேம் கார் கதவு வரை தான் பயன்படுத்தும் அனைத்திலும் அவர் தங்கத்தை பயன்படுத்தி வருகிறார்  என தெரிகிறது.

goldman12

தற்போது 5.2 கிலோகிராம் எடையுள்ள தங்கத்தை தான் நகையாக அணிந்திருப்பதாகவும் தன்னுடைய இலக்கு 8 கிலோ என்றும் விரைவில் அந்த இலக்கை எட்டுவேன் என்றும் அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஒரு கிராம் தங்கம் வாங்குவதற்கே ஏழை எளிய மக்கள் கஷ்டப்பட்டு வரும் நிலையில் கிலோ கணக்கில் அவர் தனது உடலில் மட்டுமே நகைகளை அணிந்து உள்ளார் என்றும் அவர் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

பீகார் மக்கள் தன்னை கோல்ட்மேன் என்று கூறுவதில் தனக்கு பெருமையாக இருக்கிறது என்றும் தான் எங்கு சென்றாலும் தன்னுடன் செல்பி எடுக்க மக்கள் குவிந்து வருவதை பார்க்கும் போது தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நடமாடும் கோல்டுமேனாக அவர் பாட்னா நகரின் தெருக்களில் அவ்வப்போது வலம் வந்து கொண்டிருப்பதை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்க வருகின்றனர்.