வெளிநாடு சென்றபோது பாஸ்போர்ட் தொலைந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?

By Bala Siva

Published:

 

வெளிநாட்டிற்கு சென்ற போது பாஸ்போர்ட் தொலைந்து விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

வெளிநாட்டிற்கு சென்ற போது எதிர்பாராத விதமாக பாஸ்போர்ட் தொலைந்து விட்டால் உடனே செய்ய வேண்டியது அந்த நாட்டின் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்து, அதற்கான சான்றிதழ் பெற்றுக் கொள்வது மிகவும் அவசியம். புகார் சான்றிதழ் இருந்தால் தான் தற்காலிக பாஸ்போர்ட் அல்லது புதிய பாஸ்போர்ட் பெற முடியும்.

புகார் செய்த பின்னர், இந்திய தூதரகத்தை அணுகி பாஸ்போர்ட் தொலைந்து போனது குறித்த தகவலை கூறி, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், புதிய பாஸ்போர்ட் அல்லது அவசர சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். அதன் மூலம் இந்தியா திரும்ப முடியும்.

உங்களுக்கு அவசரம் என்றால், அவசர சான்றிதழ் பெற்று இந்தியா திரும்பலாம். அவசரமில்லை என்றால், புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால், ஒரு வாரத்தில் உங்களுக்கு புதிய பாஸ்போர்ட் கிடைக்கும். அதற்கு உங்களுடைய தற்காலிக முகவரி, பிறந்த தேதி மற்றும் அடையாளச் சான்றிதழ் ஆகியவற்றோடு, காவல்துறையில் புகார் செய்த அறிக்கையுடன் சமர்ப்பித்தால், ஒரு வாரத்தில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

அதேபோல், வெளிநாட்டில் பாஸ்போர்ட் தொலைந்து அவசர பாஸ்போர்ட் பெற்ற பின்னர், ஆன்லைனில் விசாவிற்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த நாட்டு விதிமுறைகளை சரி பார்த்து விண்ணப்பம் செய்ய வேண்டும்.