டெல்லி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் 7 மணி நேரத்திற்கு மேல் தாமதமானது. இரவு 11 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் மறுநாள் காலை 6:30 மணிக்கு தான் புறப்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் மிகவும் ஒரு கட்டத்தில் கோபமாகினர். அதிலும் விமான நிறுவனம் சரியான தகவல் தரவில்லை என்றும், மாற்று ஏற்பாடுகளுக்கான உதவியும் செய்யவில்லை என்றும் அவர்கள் புகாரளித்தனர்.
இந்த பதற்றமான சூழலில், தனது தந்தை உடல்நிலை மோசமாக இருப்பதால் கவலையடைந்த ஒரு பயணி, கோபத்தின் உச்சியில் ஓர் ஊழியரின் கன்னத்தில் அறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அந்த பயணி, “என் அப்பாவின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் என கூறிய பெண் எங்களுக்கு உடனே மாற்று ஏற்பாடு செய்யுங்கள் என கெஞ்சுகிறார். ஆனாலும் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் தாமதத்திற்கான சரியான பதிலை சொல்லவில்லை, ஒரு கட்டத்தில் பைலட் தாமதமாக வருகிறார் என்று மட்டும் கூறினர். இதனால் ஆத்திரமாகிய அந்த பெண் விமான நிறுவன ஊழியரின் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்னொரு விமான பயணி கூறியபோது, எங்களுடைய குழந்தைகள் பசியால் அழுதனர், வயதானவர்கள் துவண்டனர், பலருக்கு மும்பையில் முக்கிய வேலை இருந்தது. ஆனால், ஏர் இந்தியா கொடுத்தது ஒரு மன்னிப்பும், ஒரு ஜூஸ் பாக்கெட்டும் தான் என்றார்.
இரவு முழுவதும் காத்திருந்த பயணிகள் கூறுகையில், ஒருபக்கம் போர்டிங் தொடங்கியது, பின்னர் அதையும் நிறுத்தி விட்டனர். சிலரை உள்ளே அனுப்பி விட்டு கதவையும் பூட்டிவிட்டனர் என்று தெரிவித்தார். இன்னொரு பயணியோ இந்த நெருக்கடியான நேரத்தில் சிரித்த ஊழியரிடம், “சிரிக்காதே, புரிந்து கொள்,” என்று கடுமையாக கேட்டுள்ளார்.
இந்த சம்பவம் வெளியான பிறகு சமூக ஊடகங்களில் ஏர் இந்தியாவிற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.
ஒருவர், “ஏர் இந்தியாவோ, இண்டிகோவோ இரண்டும் ஒரே மாதிரி,” என்று விமர்சித்தார்.
மற்றொருவர், “நானும் ஒரு முறை 6 மணி நேரம் விமானத்தில் விளக்கம் இல்லாமல் சிக்கிக் கொண்டேன்,” என்றார். மூன்றாவது ஒருவர் நகைச்சுவையாக, “ஏர் இந்தியா ஜூஸ் குடிக்க வைத்தது. இண்டிகோ இருந்தால், தண்ணீர் கூட கிடைக்காது,” என்று கூறினார்.
https://www.instagram.com/p/DInTkEJBOtq/