நீங்க பானி பூரி பிரியரா..? உஷார்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை.. இனிமேல் சாப்பிடும் போது கவனம்..

பெங்களுரு : நம் ஊரில் ஸ்நானக்ஸ் என்றவுடன் பஜ்ஜி, வடை, பப்ஸ் என எப்படி பல ஐயிட்டங்கள் நினைவுக்கு வருகிறதோ அதேபோல் வட இந்தியாவில் நினைவுக்கு வருவது பானி பூரி தான். பானி என்றால்…

Pani Puri

பெங்களுரு : நம் ஊரில் ஸ்நானக்ஸ் என்றவுடன் பஜ்ஜி, வடை, பப்ஸ் என எப்படி பல ஐயிட்டங்கள் நினைவுக்கு வருகிறதோ அதேபோல் வட இந்தியாவில் நினைவுக்கு வருவது பானி பூரி தான். பானி என்றால் தண்ணீர். ரசம் போன்ற நீரை சிறிய பூரியில் உள்ளே ஊற்றி அதை அப்படியே விழுங்குவதுதான் பானி பூரி ஸ்டைல்.

வட இந்தியாவில் எப்படி இந்த சிற்றுண்டி பிரலபலமான உணவாக இருக்கிறதோ அது தற்போது இந்திய முழுக்க பரவி அனைத்து இடங்களிலும் பிளாட் பார்ம் கடைகளிலும் தாராளமாகக் கிடைக்கிறது. குறிப்பாக வட இந்திய இளைஞர்கள் ரோட்டில் பானிபூரியை வைத்து விற்கும் போது அதை நம்மூர் மக்கள் விரும்பி வாங்கிச் சாப்பிடுகின்றனர்.

பானிபூரியின் சுவைக்கு அடிமையானவர்கள் தினசரி இதை எடுத்துக் கொள்கின்றனர். குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவியர் அதிக அளவில் உண்கின்றனர். இப்படி அனைவராலும் விரும்பிச் சாப்பிடும் பானி பூரிக்கு இப்போது சிக்கல் வந்துள்ளது. அது என்னவெனில் பெங்களுரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தான்.

பானி பூரி தயாரிக்கப்படும் விதம் பற்றியும், சுகாதரம் இல்லாமல் அதை மக்களுக்கு விற்பது போன்ற பல வீடியோக்கள் வந்தாலும் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தற்போது இந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கம் வகையில் உள்ளதால் இனி பானி பூரி சாப்பிடுவோர் சற்று கவனத்துடன் உண்பது உத்தமம்.

ஊதிய உயர்வு மகிழ்ச்சியில் அம்மா உணவக பணியாளர்கள்.. 8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த சம்பள உயர்வு

கர்நாடக உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், மக்கள் விரும்பி சாப்பிடும் பானி பூரியில் புற்றுநோயை உருவாக்கும் செயற்கை நிறமிகள் அதிகம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. கர்நாடகா முழுவதும் சுமார் 260 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்ததில் 41 மாதிரிகளில் புற்று நோய் விளைவிக்கக் கூடியதாகவும் 18 மாதிரிகள் மனிதர்கள் உண்பதற்கே தகுதியற்றதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி தற்போது பானி பூரி விரும்பிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தினசரி நாம் நல்ல உணவு என்று சாப்பிடும் இதில் தான் இவ்வளவு விஷமும் கலந்துள்ளதா என புலம்புகின்றனர். மேலும் இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பஞ்சு மிட்டாயிலும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் வேதிப் பொருட்கள் கலந்திருந்தது கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.