ஸ்கூலுக்கே போனதில்ல.. ஆனாலும் இப்டி ஒரு திறமை.. உலகையே திரும்பி பாக்க வெச்ச பாகிஸ்தான் சிறுமி.. வீடியோ..

சமூக வலைத்தளத்தை எடுத்துக் கொண்டாலே ஒருவர் வாழ்க்கையில் உத்வேகத்தை தூண்டக்கூடிய வீடியோ அல்லது செய்திகளை காட்டிலும் எதிர்மறையான விஷயங்கள் அடங்கிய நிகழ்வுகள் தான் அதிகம் வைரலாகி வருகிறது. டாக்சிக் (Toxic) என இன்று பல…

Pakistan Girl English Fluency

சமூக வலைத்தளத்தை எடுத்துக் கொண்டாலே ஒருவர் வாழ்க்கையில் உத்வேகத்தை தூண்டக்கூடிய வீடியோ அல்லது செய்திகளை காட்டிலும் எதிர்மறையான விஷயங்கள் அடங்கிய நிகழ்வுகள் தான் அதிகம் வைரலாகி வருகிறது. டாக்சிக் (Toxic) என இன்று பல மக்களால் அதிகமாக குறிப்பிடப்படும் ஒரு வார்த்தையின் பின்னணியில் தான் பெரும்பாலான சமூக வலைதளங்கள் இயங்கி வருவதாகவும் ஒரு பரபரப்பு கருத்து இருந்து வரும் நிலையில் எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல தளங்களும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கொஞ்சம் நேரத்தை செலவழிக்கலாம் என இந்த மேற்குறிப்பிட்ட தளங்களில் செல்லும்போது அவை இன்னும் நம் மனதுக்கு ஒரு பாரத்தை கொடுப்பதுடன் மட்டுமில்லாமல் தலைவலியை ஏற்படுத்தி மன உளைச்சலுக்கும் ஆளாக்கும். அப்படி இருக்கும் ஒரு சமூக வலைதளத்தில் குறிஞ்சி பூத்தார் போல ஏதாவது ஒரு நேரத்தில் நம்மை நெகிழ வைக்கக்கூடிய அல்லது ஒரு நல்ல விஷயத்தை எடுத்துரைக்க வகையிலான வீடியோக்களும் வைரலாவதை கவனித்திருப்போம்.

ஸ்கூலுக்கு போகாமலே இப்படி ஒரு திறமையா..

அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிறுமி செய்த விஷயம் தொடர்பான வீடியோ தான் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஷேஷான் என்ற நபர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த நாட்டில் சாலையோரம் தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்கும் சிறுமி ஒருவர் பேசும் வீடியோவை தான் அவர் பகிர்ந்து இருந்தார்.

இந்த வீடியோ உலக அளவில் அதிகம் வைரலாகி வரும் நிலையில் அப்படி அந்த சிறுமி என்ன செய்துவிட்டார் என்பதுதான் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. சுமைலா என்ற அந்த சிறுமி பள்ளிக்கூடம் செல்லாமல் இருக்கும் அதே வேளையில் தனது குடும்பத்தினருக்காக சாலை ஓரம் கடலை உள்ளிட்ட சில தின்பண்டங்களையும் விற்பனை செய்து வருகிறார்.

சிறுமியின் ஆங்கில புலமை

ஆனால் பள்ளிக்குச் செல்லவில்லை என்றாலும் அந்த பெண் தன்னை பற்றி தெரிவிக்கும் தகவல்களை ஆங்கிலம் பயிலும் மாணவர்களை விட மிக துல்லியமான ஆங்கிலத்தில் உச்சரிக்கவும் செய்கிறார். மேலும் அந்த சிறுமி சுமைலா தனது தந்தைக்கு 14 மொழிகள் தெரியும் என்றும் தனக்கும் பள்ளிக்குச் செல்லாமலேயே உருது, ஆங்கிலம், சித்ராளி, சிராக்கி, பஞ்சாபி மற்றும் பாஸ்ட்ரோ என ஆறு மொழிகள் தெரியும் என்றும் தனது தந்தையின் மூலம் இவற்றை கற்று தேர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்னொரு வீடியோவில் தனது குடும்பத்தில் இருப்பவர்களை பற்றியும் பேசும் சிறுமி சுமைலா சாலையோரத்தில் இப்படி ஒரு வேலை செய்து கொண்டும் மிக அழகான உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசும் வீடியோ அனைவரையுமே தற்போது வெகுவாக கவர்ந்து வருகிறது.