பேஜர் வெடிகுண்டு எதிரொலி: சீனாவின் சிசிடிவி கேமராக்களுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி..!

By Bala Siva

Published:

 

சமீபத்தில் லெபனான் நாட்டில் பல்வேறு இடங்களில் பேஜர் வெடிகுண்டுகள் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சீனாவின் சிசிடிவி கேமராக்களை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

லெபனான் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பல இடங்களில் வெடித்த பேஜர் வெடிகுண்டு தாக்குதல்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், இதனால் உலகம் முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு வெடிப்புக்கு சீன சிசிடிவிகளும் ஒரு காரணம் என்று கூறப்படும் நிலையில், மத்திய அரசு அதிரடியாக சீனாவில் தயாரிக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. அக்டோபர் 8 ஆம் தேதி முதல் அனைத்து பகுதிகளிலும் சீனாவின் சிசிடிவி கேமராக்களை பயன்படுத்தக் கூடாது என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன சிசிடிவி கேமராக்களை வாங்கக்கூடாது, மேலும் நம்பகமான இந்திய நிறுவனங்களின் சிசிடிவி கேமராக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சிசிடிவி கேமராக்களை பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பு சான்றிதழ் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் மூன்று முக்கிய நிறுவனங்கள் சிசிடிவி கேமராக்களை வழங்கி வருகின்றன. அவற்றில் இரண்டு நிறுவனங்கள் சீன நிறுவனங்களாகும், அதே சமயம் ‘சிபி பிளஸ்’ என்ற ஒரே இந்திய நிறுவனம் மட்டுமே சிசிடிவி கேமராக்களை வழங்கி வருகிறது. இந்த மூன்று நிறுவனங்களும் இந்தியாவில் சுமார் 60% சிசிடிவி கேமராக்களை வழங்கி வருகின்றன. சீன சிசிடிவி கேமராக்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: cctv, china, pager