தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் சமீபத்தில் கொடியை அறிமுகம் செய்தார் என்பதும் அந்த கொடி குறித்த சர்ச்சைக்குரிய தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக விஜய் தனது கட்சியின் முதல் மாநாடு நடத்தும் பணியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த மாநாட்டின் போது சில அரசியல் கட்சி பிரமுகர்களும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், விஜய் கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தந்தை ஓபிஎஸ் இடம் ரவீந்திரநாத் பேசியதாகவும் அதற்கு அவர் ‘நான் அதிமுகவை மீட்டெடுக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் போது எனது மகனே வேறொரு கட்சிகள் இணைந்தால் அரசியலில் எனக்கு என்ன மரியாதை இருக்கும்? என்று கேட்டதாகவும் அதற்கு பதிலாக ரவீந்திரநாத் ’தேர்தலில் தோல்வி அடைந்து விட்டோம், ராஜ்யசபா சீட் கிடைக்கிற மாதிரியும் தெரியவில்லை, அப்படி இருக்கும்போது என்னுடைய எதிர்கால அரசியலை நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும், அதனால் தான் விஜய் கட்சிகள் இணைய போகிறேன்’ என்று கூறியதாகவும், ஓபிஎஸ் இதனால் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில் விஜய் கட்சியின் முதல் மாநாட்டின் போது இது போன்ற பல எதிர்பாராத ட்விஸ்ட்கள் இருக்கும் என்று கூறப்படுவதை அடுத்து விஜய் கட்சியின் தொண்டர்களே இந்த ட்விஸ்ட்டை நாங்களே எதிர்பார்க்கவே இல்லை என்று கூறி வருகின்றனர்.