பணம் சம்பாதிக்கும் நோக்கில் நாம் என்னதான் நகரத்தை நோக்கி ஓடினாலும் அனைவரும் வாழ அசைப்படுவது கிராமத்தில்தாங்க.
ஆனால் ஒரு கிராமத்தில் ஒரே ஒரு ஆள் மட்டும் வசிக்கிறார் என்ற செய்தி வெளியாக அனைவரும் ஆச்சர்யம் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
அதாவது தூத்துக்குடி மாவட்டத்தின் மீனாட்சிபுரம் அருகே உள்ள ஒரு கிராமம் தான் கருங்குளம். இந்த கிராமத்தில் ஒரே ஒரு நபர் மட்டுமே வாழ்ந்து வருகிறார்.
2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை மட்டுமே அந்த ஊரில் மக்கள் வசித்துள்ளனர்.
அந்த கிராமத்தில் உள்ள வீடுகள் இடிந்துவிழுந்து காணப்படுகின்றது. மேலும் அந்த கிராமத்தில் உள்ள தண்ணீர் டேங்குகள், அடி குழாய், பள்ளிக் கூடம் என அனைத்தும் பாழடைந்து உடைந்து விழுந்து கிடக்கின்றது.
அந்த ஊரைவிட்டு மக்கள் ஏன் காலி செய்துவிட்டு போனார்கள் என்பது தெரியவில்லை. சாதியப் பிரச்சினைகளால் வெளியேறி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
கருங்குளம் அரசு ஆரம்பப் பள்ளியில் உள்ள கரும்பலகையில் 11.06.2013 என்று எழுதப்பட்டுள்ளது, இதை வைத்துப் பார்த்தால் அந்த கிராமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக மக்கள் வசிக்கவில்லை என்பது தெரிகின்றது.